உலகில் உள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவை விடவும் தங்கத்தின் விலை மிக குறைவாக உள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை ஆனது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. துபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை வாங்கி வர நினைப்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒரு நபர் எவ்வளவு தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்து வர முடியும் என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
துபாயிலிருந்து இந்தியாவிற்கு தங்கத்தை எடுத்து வருவதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் :-
✓ 6 மாதங்களுக்கும் மேலாக துபாயில் தங்கி இருக்கக்கூடிய NRI, OCI மற்றும் இந்திய குடிமகன்கள் தங்கத்தை எடுத்து வர தகுதியுடையவர்கள்.
✓ NRI யில் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை 10,000 கிராம்கள் வரை தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்து வர முடியும்.
✓ இவ்வாறு எடுத்து வரக் கூடிய தங்கத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் வரி விலக்கு உண்டு. மீதமுள்ள தங்கத்திற்கு சுங்கவரி செலுத்துதல் கட்டாயம்
NRI அல்லாதவர்களுக்கான தங்கத்தின் அளவு விவரங்கள் :-
✓ ஆண் பயணிகள் – 20 கிராம் தங்கம் ( 50,000 )
✓ பெண் பயணிகள் – 40 கிராம் தங்கம் ( 1,00,000 )
✓ குழந்தைகள் – 20 முதல் 40 கிராம் வரையிலான தங்கம். இவை பாலினத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
பொதுவாக 40 கிராம் தங்கம் வரை சுங்கவரி கிடையாது. 100 கிராம் வரையிலான தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்த வருவதற்கு மூன்று சதவீத சுங்கவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.