நுங்கு எப்படி வாங்கலாம்..எந்த நேரத்தில் சாப்பிடலாம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

நுங்கு எப்படி வாங்கலாம்..எந்த நேரத்தில் சாப்பிடலாம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

கோடைகாலத்தில் நமது உடலை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிருட்டு பானங்களை தவிர்த்து விட்டு இளநீர் நுங்கு போன்றவற்றை சாப்பிடலாம். குறிப்பாக இந்த இளநீர் நுங்கு யாரெல்லாம் சாப்பிடலாம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது எப்படி வாங்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.

நுங்கு எடுத்துக் கொண்டால் முன்பே வெட்டி வைத்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். நீண்ட நேரம் நுங்கானது வெட்டி வெளியில் இருந்தால் அதனை சாப்பிடக்கூடாது. அதேபோல நுங்கு சாப்பிடுவதற்கு முன் அதனை ஒருமுறை கழுவிக்கொள்ள வேண்டும். பாக்டீரியா தொற்றுகள் ஈக்கள் போன்றவை அதன் மேல் உட்காருவதால் நமது உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும்.

இதனால் நுங்கை கழுவி சாப்பிடுவது நல்லது. அதேபோல அதிகளவு முற்றிய நுங்கு  சாப்பிடுவதால் வயிற்று கோளாறு உண்டாகும். அதேபோல நுங்கில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதனின் தோலுடன் சாப்பிட வேண்டும். இதனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் தவிர்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தோலுடன் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை உண்டாகும்.

காலை உணவு சாப்பிட்டபின் நுங்கு சாப்பிடலாம். அதற்கு மாறாக மதியம் மற்றும் மாலை நேரத்தில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். அதேபோல நுங்கு அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.அளவுடன் மட்டுமே சாப்பிட வேண்டும். நுங்கு வாங்கும் பொழுது மிகவும் வெள்ளையாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். மேற்கொண்டு அதிலிருந்து எந்த ஒரு துர்நாற்றமும் அடிக்கக்கூடாது. இவ்வாறு வாங்கினால் அது சாப்பிடுவதற்கு உகந்தது.