திருமணத்திற்கு பிறகு ஆதார் கார்டில் உங்கள் குடும்பப் பெயரை மாற்றுவது எப்படி? இதோ அதற்கான வழிமுறை!
ஆதார் அட்டை தற்பொழுது அனைத்து இடங்களிலும் முக்கியத்துவமான ஒன்றாக பயன்படுகிறது. எனக்கு தொடங்குவது ஒரு இடம் அனைத்து இடங்களிலும் காதர் அட்டை அவசியமாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றாக செயல்படுவதால் அவற்றில் திருத்தம் இன்றி சரியான முறையில் வைத்திருப்பது அவசியம்.
ஆனால் பலர் திருமணத்திற்கு பின்பு தங்கள் ஆதார் அட்டையை புதுப்பிப்பதையே மறந்து விடுகிறார்கள்.திருமணத்திற்கு பிறகு கணவர் பெயர் மற்றும் நம இருக்கும் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்வது அவசியம்.
இதனை நாம் ஆன்லைனிலேயே எளிதாக செய்து கொள்ளலாம்.முதலில்,மாற்றம் செய்ய விரும்புவர்கள் உங்கள் ஆதார் அட்டை பயன்படுத்தி UIDAI என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும். அதனையடுத்து உங்களது பெயர் ,குடும்ப பெயர் ,ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.உடனடியாக உங்க எண்ணிற்கு ஓர் ஓடிபி எண் வரும்.
அந்த ஓடிபி எண்ணை சமர்பித்து உங்களது பெயர் மற்றும் முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள் அருகில் இருக்கும் இ சேவை மையத்திற்கு சென்றும் கூட மாற்றிக்கொள்ளலாம்.ஆன்லைனில் மாற்றம் செய்வதற்கு எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை.