கொரோனா நோய் தொற்று பரவ கட்டுப்படுத்த பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக நாடுகளே கட்டாயம் ஆக்கியுள்ளது.
கொரோனா நோய் தொற்று தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில், மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் N95 ரக முக கவசத்தை பயன்படுத்துகின்றனர்.
அதன் காரணமாக N95 முகக் கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் நோக்கத்தில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்த N95 முக கவசம் எப்படி தூய்மை செய்வது? என்ற ஆராய்ச்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.
அந்த ஆராய்ச்சியின் பலனாக, N95 கவசத்தை மின்சார குக்கரில் வைத்து 50 நிமிடங்கள் வரை வெப்பபடுத்த வேண்டும். இதன் மூலமாக செயல்திறன் பாதிக்கப்படாமல் முக கவசத்தை தூய்மைப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நடைமுறையின் மூலம் N95 கவசத்தை தூய்மைப் படுத்திக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்