பெர்ஃப்யூம் இல்லாமல் உடலில் உள்ள வியர்வையை நேச்சுரலா கண்ட்ரோல் செய்வது எப்படி?
கோடை காலம் ஆரம்பித்து விட்டால் உடலில் இருந்து அதிகளவு வியர்வை வாடை வீசத் தொடங்கி விடும்.இதை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.வியர்வை நாற்றத்தால் நமக்கு நெருக்கமானவர்கள் கூட நம்மிடம் வர தயங்கும் நிலை உருவாகி விடுகிறது.சிலர் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உடலில் பர்பியூம்,பாடி ஸ்ப்ரே அடித்துக் கொள்கிறார்கள்.சிலர் தங்களின் உடைகளை நறுமண திரவியங்கள் மூலம் சுத்தம் செய்து பயன்படுத்துகின்றனர்.
இவை எதுவும் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தாது.மாறாக வியர்வை நாற்றத்தை அதிகரிக்கச் செய்து விடும். இந்த மோசமான நிலமை தங்களுக்கு ஏற்படக் கூடாது என்றால் நீங்கள் உடலை இயற்கையன முறையில் நறுமணமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு நீங்கள் குளிக்கும் நீரில் இயற்கை வாசனை நிறைந்த பொருட்களை போட்டு குளித்து வரலாம்.ஒரு வெள்ளை காட்டன் துணியில் சிறிது வெட்டி வேர்,வேப்பிலை,தாழம்பூ,சந்தன கட்டையை போட்டு மூட்டை போல் கட்டிக் கொள்ளவும்.
இதை நீங்கள் குளிக்கும் நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் அந்த மூட்டையை நீக்கிவிட்டு குளித்தால் உடலில் இருந்து வீசும் வியர்வை வாடை கட்டுப்படும்.
அதேபோல் எலுமிச்சை சாறு,கல் உப்பு கலந்த நீரில் குளித்தால் உடலில் இருக்கின்ற கெட்ட பாக்டிரியாக்கள் முழுமையாக வெளியேறி விடும்.இதனால் உடல் துர்நற்றம் கட்டுப்படும்.
நன்னாரி வேர்,ரோஜா இதழ்களை நறுக்கி நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவிட்டு குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் கட்டுப்படும்.