மருத்துவச் செலவு இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

0
3

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – 5 கிராம்
2)ஓமம் – 5 கிராம்
3)பெருஞ்சீரகம் – 5 கிராம்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

2.தண்ணீர் சிறிது சூடானதும் ஐந்து கிராம் அளவிற்கு சீரகம்,ஐந்து கிராம் அளவிற்கு ஓமத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3.அடுத்து ஐந்து கிராம் அளவிற்கு பெருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

4.அதன் பிறகு சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:

1)முருங்கை கீரை – நான்கு தேக்கரண்டி
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

2.அடுத்து அதில் முருங்கை கீரை மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

3.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு வறுக்க வேண்டும்.

2.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடித்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

Previous articleவலி நிவாரணி மருந்து இல்லாமல் கை மணிக்கட்டு வலியை குறைக்க.. இப்படி செய்யுங்கள்!!
Next articleநீங்கள் கேக் பிரியரா? இது தெரிந்தால் இனி பர்த் டேக்கு கூட கேக் வாங்க மாட்டீங்க!!