வங்கியின் கடன் மற்றும் கிரெட்டிட் கார்டு தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி?
ஹெச்டிஎப்சி வங்கியின் கடன், கிரிட்டிட் கார்டு அழைப்புகளை தடுப்பது எப்படி? பிற விளம்பரம் மற்றும் கடன் தொடர்பான அழைப்புகளை தடுப்பது எப்படி என்பதை இங்கு நாம் காணலாம்.
முதலாவது நமக்கு கடன் தேவையும் இல்லை ஆனால் கடன் வாங்கும் படி நிறைய நிதி நிறுவனங்கள் நம்மை தொடர்பு கொண்டு வற்புறுத்துவார்கள்.
அடிக்கடி எப்படியும் நமது செல்போன் என்னை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு நிறைய திட்டங்கள் இருக்கிறது இதில் சேரவில்லை அதிசயத்தில் என்று கூறி நம்மை அவர்கள் நிதி நிறுவனத்தில் இது ஒரு திட்டத்தில் சேர்த்து விடுவார்கள் இருக்கிறீங்க என்று மோசடிகளும் நடைபெறுவது உண்டு.
தனியார் வங்கிகளும் கடன் தொகை வழங்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் நமக்கு கடன் தேவையில்லை என்று சொன்னாலும் அவர்கள் விடுவதில்லை நம்மை பின்தொடர்ந்து நமது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மற்றும் கால் செய்து கடன் வாங்கும்வரை நம்மை விட மாட்டார்கள் இதனால் நமக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும்.
தற்போது முன்னணி வங்கி நிறுவனங்கள் கூட கடன் சேவையை பெரிதுப்படுத்தி வருகின்றனர். கடன் தொகையை கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் கிரெடிட் கார்டு சேவையை கட்டாயம் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டும் என்று வங்கி ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி மோசடியான கால்களை தவிர்ப்பது எப்படி?
கடனே வேண்டாம் என்று நினைப்போருக்கு ஒரு கட்டத்தில் இது தொல்லையாக மாறுகிறது. எனவே கடன் அழைப்புகள் மற்றும் கிரெடிட் கார்டு அழைப்புகளில் இருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். நீங்கள் ‘do not call registration ‘ செய்ய வேண்டும். எப்படி செய்வது என்றால், ரெம்ப சிம்பிள், உங்கள் செல்போனை எடுங்கள்.
1909 நம்பர்: எந்த செல்போனுக்கு ஓயாமல் கால் வருகிறதோ அந்த செல்போன் எண்ணில் இருந்து 1909 என்ற எண்ணிற்கு FULLY BLOCK என்பதை மெசேஜ் ஆக டைப் செய்து அனுப்புங்கள். 24 மணி நேரத்துக்குள் உங்கள் செல்போனுக்கு வரும் விளம்பரம் மற்றும் கிரெடிட் கார்டு சேவித்தது பான போன் கால் மட்டும் குறுஞ்செய்திகள் எதுவும் இனி வராது.
ஹெச்டிஎப்சி வங்கியின் கடன் தொல்லையில் இருந்து தப்பிப்பது எப்படி. அதாவது ஹெச்டிஎப்சி வங்கியின் இணையதளத்தில் சென்று, நமக்கு வரும் தேவையற்ற செல்போன் தொடர்புகளை துண்டிக்கலாம்.
அதாவது, https://leads.hdfcbank.com/ applications/misc/dnc/dnc. aspx?calltype=dnc& AspxAutoDetectCookieSupport=1 என்ற லிங்கில் உள்ளே செல்லுங்கள். அதில் ‘do not call registration ‘ என்று இருக்கும். அதில் உங்கள் பெயர், மொபைல் எண், இமெயில் உள்ளிட்ட தகவல்களை அளித்து நமக்கு வரும் தேவையற்ற தொடர்புகளை தவிர்க்கலாம் நாம் இணையதளத்தில் கூறும் விண்ணப்பம் 15 நாட்களுக்குள் வங்கியால் செயல்முறைப்படுத்தப்படும். இனி நமக்கு கடன் வாங்கிக்கோங்க! வாங்கிக்கோங்க! என்று நச்சரிக்கும் தொல்லை இனி இருக்காது.