அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?

0
132
#image_title

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இணையத்தள குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அதிக குற்றங்கள் பதிவாவது முகநூலில் தான். அதிக குற்றம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அதாவது முகநூலில் தான் மிகச் சுலபமாக போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் நிறைய நண்பர்களை இணைத்துக் கொள்ள முடியும். அதனை சிலர் தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு பணப்பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

நமக்கு நன்கு பழக்கமான நண்பர் ஒருவரின் முகநூல் கணக்கில் இருந்து நமக்கு குறுஞ்செய்திகள் வரும். அதற்கு நாம் பதில் அளிக்க கூடாது. ஆனால் பதில் அளித்து விட்டால், முதலில் நலம் விசாரிப்பது போல் உள்ள அந்த குறுஞ்செய்திகள் பிறகு தனக்கு பணம் தேவை என்றும் அவசரம் என்றும் உடனே பணத்தை அனுப்பும்படி அந்த முகநூல் கணக்கிலிருந்து குறுஞ்செய்தி வரும். உடனே நாமும் பணத்தை அனுப்பி விடுவோம். பிறகு தான் நமக்கு தெரிய வரும் அது நம் நண்பரின் முகநூல் கணக்கில்லை, போலியான முகநூல் கணக்கில் இருந்து யாரோ நம்மை ஏமாற்றியுள்ளது.

இப்படி ஏமாந்து நிறைய பேர் பணத்தை அனுப்பிய பிறகு தான் தாங்கள் செய்த தவறை உணர்ந்துள்ளனர். சிலர் ஆயிரக்கணக்கில், ஒரு சிலர் லட்சக்கணக்கிலும் கூட பணத்தை அனுப்பி ஏமாந்து இருக்கின்றனர்.

இதுகுறித்து, சைபர் கிரைம் காவல் துறையினர் கூறுவதாகது, எந்தநேர்த்திலும் முன்,பின் தெரியாத நபர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாட வேண்டும் என்றும் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். மேலும், உங்கள் நேரத்தை வீணடிக்கும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

 

 

Previous articleஇனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டோம்!!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
Next articleகோலிவுட்டின் வசூல் வேட்டையர் விஜய்யா? இல்ல ரஜினியா?