ஆதார் கார்டுக்கு கொடுத்த மொபைல் எண்ணை மறந்துவிட்டீர்களா!! இதோ எளிமையாக கண்டுபிடிக்கலாம்!!

Photo of author

By Rupa

ஆதார் கார்டுக்கு கொடுத்த மொபைல் எண்ணை மறந்துவிட்டீர்களா!! இதோ எளிமையாக கண்டுபிடிக்கலாம்!!

ஆதார் அட்டையானது தற்பொழுது அனைத்து இடங்களிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. வங்கி கணக்கு தொடங்குவதிகிருந்து ரேஷன் அட்டை வாங்குவது முதல் அனைத்திற்கும் ஆதார் அட்டை அவசியமாகிவிட்டது.நாம் பயன்படுத்தும் ஆதார் அட்டையில் அவ்வபோது பல திருத்தங்களை செய்ய வேண்டி இருக்கும்.

இதனையெல்லாம் நாம் வீட்டில் இருந்தே கையில் இருக்கும் மொபைலில் செய்துவிடலாம். தற்பொழுது ஆதார் அட்டையில் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணானது நமது கையில் இருந்தால் தான் அதற்குண்டான otp வரும். ஆனால் நாம் என்ன மொபைல் நம்பர் கொடுத்தோம் என்பதையே சிலர் மறந்துவிடுகின்றனர். அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நமது மொபைலில் உள்ள கூகுளில் https://ask.uidai.gov.in/ இந்த பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அந்தப் பக்கத்திற்கு சென்றதும் அதை ஸ்க்ரோல் செய்தால் கீழே ஆதார் சர்வீஸ் என்று காண்பிக்கும்.

அதில் ஆதார் சர்வீஸ் அண்ட் ஆதார் நம்பர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதை கிளிக் செய்ததும் ஒரு புதிய பக்கத்தில் நீங்கள் உங்களின் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.

பின்பு அங்கிருக்கும் கேப்ட்சா எழுத்துக்களையும் சரியாக பதிவிட வேண்டும்.

அவ்வாறு கொடுத்ததும் அங்கிருக்கும் புரசீட் அண்ட் வெரிஃபை ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதன் பிறகு மீண்டும் ஒரு புதிய பக்கம் ஒன்று தோன்றும் அதில் கீழே நகர்த்தி பார்த்தால் நீங்கள் உங்களது ஆதார் அட்டைக்கு கொடுத்த செல்போன் எண்ணின் கடைசி மூன்று எண்கள் தோன்றும்.

இதை வைத்து உங்களது ஆதார் இணைப்புக்கு கொடுத்த மொபைல் எண்ணை கண்டுபிடித்து விடலாம்.