மாதவிடாய் தள்ளி போவதற்கு முன்பே கர்ப்பத்தை கண்டறிவது எப்படி?

0
197
Representative purpose only

ஒரு பெண் தான் கர்ப்பமாக உள்ளதை மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவதை வைத்தே கணிக்கிறாள். மருத்துவமனைக்கு செல்லும் போது கூட கடைசியாக மாதவிலக்கு எப்போது ஆனது என்றே கேட்பார்கள்.

மாதவிடாய் என்பது முதிர்ந்த கருமுட்டை கருவுறாத போது இறந்த செல்களாக கர்ப்பபையிலிருந்து வெளிவரும் இயற்கை நிகழ்வாகும்.

சில நேரங்களில், கால நிலை மாற்றம், உணவு பழக்கம், மனஅழுத்தம் போன்ற காரணிகள் மாதவிடாய் தள்ளிபோவதற்கு காரணமாக உள்ளது.

மாதவிடாய் தள்ளிப்போகும் போது தான் கர்ப்பத்தை கண்டுபிடிப்பதனால் சில நேரங்களில் பெண்கள் அதற்கு முன்பாக கர்ப்பத்திற்கு ஒத்து வராத காரியங்களை செய்து விடுவார்கள்.

கீழ் வரும் அறிகுறிகளின் மூலம் மாதவிடாய் தள்ளிபோவதற்கு முன்னே கர்ப்பத்தை கண்டறியலாம்:

கர்ப்ப காலத்தின் அறிகுறிகள் ஏறக்குறைய மாதவிடாய் அறிகுறிகள் போலவே இருந்தாலும் சற்று மாறுபட்டு நீண்ட நாளாக இருக்க கூடும்.

*கருவானது கருமுட்டையுடன் ஒட்டும் பொழுது வயிற்று சதை பகுதியில் சதைப்பிடிப்பு போல உணர்வு ஏற்படும். இது எல்லாருக்கும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாலும் இது கர்ப்ப காலத்தின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

*பெரிதாக அல்லது வீங்கிய மார்பகங்கள் கர்ப்பகாலத்தின் மற்றுமொரு அறிகுறியாகும். இது ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பினால் ஏற்படும்.

*நமது உணவுப்பழக்கங்களில் மாற்றம் ஏற்படும். அதாவது ஒரு சில உணவுகள், வாசனைகள் பிடிக்காமல் போவது, அதிகமாக பசியுணர்வு, அல்லது பசியின்மை போன்றவை ஏற்படும்.

*அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுவதும் ஒரு அறிகுறிதான். கருத்தரிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே சிறுநீர்ப்பை கழிவுகளை வடிக்கட்ட தொடங்குவதே இதற்கு காரணம்.

*கர்ப்பப்பையிலிருந்து திரவம் போன்று வெளியரும், இது சளி போன்ற திரவமாக வெளியேறினால் டெஸ்ட் எடுத்து கொள்வது நல்லது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Previous articleஅரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?வெளியான தகவல்.!!
Next article#Breaking IPL 2021: IPL டிராபியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி