வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவது எப்படி?? செல்போனில் இதை மட்டும் செய்யுங்கள் உடனே பெற்றுக்கொள்ளலாம்!!

Photo of author

By Rupa

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவது எப்படி?? செல்போனில் இதை மட்டும் செய்யுங்கள் உடனே பெற்றுக்கொள்ளலாம்!!

சமீபத்தில் சாலையில் செல்பவர் பலரை  நாய்கள் தாக்கியதை அடுத்து சென்னையில் புதிய நடவடிக்கை ஒன்றை அமல்படுத்தினர். இனி நாய்கள் வளர்க்க வேண்டும் என்றால் அதற்கென்று உரிமத்தை பெற வேண்டும் என்றும் அதனை வருடம் தோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறினர். அப்படி உரிமம் இல்லாத நாய்கள் அனைத்தும் மாநகராட்சியின் கீழ் பிடித்து செல்லப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

பலருக்கும் இந்த செல்லப்பிராணி வளர்ப்பது குறித்து ஆவணம் எடுப்பது எப்படி என்று தெரியாமல் உள்ளனர். இதுகுறித்து தற்பொழுது சென்னை மாநகராட்சி எப்படி செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளது. அதில், செல்போனில் www.chennaicorparation.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் சென்றவுடன் ஆன்லைன் சர்வீஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் செல்லப்பிராணிகள் உரிமம் அதாவது பெட் அனிமல் லைசென்ஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு நியூ யூசர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அந்த நியூ யூசர் ஐ கிளிக் செய்ததும் பின்பு நான்கு இலக்க எண் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்த பிறகு உங்களது செல்போன் எண் மற்றும் நான்கு இலக்க பின் நம்பர் இரண்டையும் கொடுத்து கிளிக் செய்ய வேண்டும். இதனை செய்த பிறகு நியூ ரெஜிஸ்ட்ரேஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் செல்லப்பிராணி வளர்ப்பவரின் புகைப்படம், செல்லப் பிராணிக்கு செலுத்தப்பட்ட ஏ ஆர் வி தடுப்பூசி உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பித்த பின் சப்மிட் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த  விவரங்களை கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்த பிறகு உங்களது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்தி மூலம் நீங்கள் இதற்கான தொகையை செலுத்தலாம்.

இதற்கு 50 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தொகையை செலுத்தியதும் உங்களது செல்லப்பிராணியின் லைசென்ஸ் ஆனது லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி வருடம் தோறும் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர் இந்த லைசன்ஸ் உரிமத்தை புதுப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.