ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும், இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் மலிவு விலைகளில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்த அடையாள ஆவணம் இல்லாவிட்டால் மலிவு விலையில் உங்கள்ள பொருட்களை வாங்க முடியாது. இதுவரை ரேஷன் கார்டு பெறுவது அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை, இதற்காக பல இடங்களுக்கு பல மணி நேரங்கள் செலவு செய்து அலைந்து திரிய வேண்டும். ஆனால் இப்பொழுது அரசு ரேஷன் கார்டு பெரும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
மக்களின் நலனை கருத்திற்கொண்டு உத்தரகாண்ட் அரசு ரேஷன் கார்டு பெறும் செயல்முறையை ஆன்லைன் மூலம் எளிதாக்கியுள்ளது. இனிமேல் நீங்கள் இதற்காக மாவட்ட வழங்கல் அலுவலகம் செல்லவோ அல்லது புரோக்கர்களிடமோ அல்லது ஏதேனும் அதிகரிகளிடமோ பணத்தை கொடுத்து ஏமாறவும் வேண்டியதில்லை, அவர்கள் பின்னால் சுற்றி அலையவும் வேண்டிய தேவையில்லை. ஒரே நாளில் உங்களுக்கு ரேஷன் கார்டு தயாராகிவிடும், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் சில மணிநேரங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு, பிறகு உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். நீங்கள் வழங்கிய ஆவணங்களில் அல்லது விண்ணப்பத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது சரிசெய்யப்பட்டு மறுநாளுக்குள் உங்களுக்கு ரேஷன் கார்டு செய்து தரப்படும். ரேஷன் கார்டு உங்கள் கைக்கு கிடைத்த குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தான் உங்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.