சிறுநீர் கடுப்பு சரியாக ரோட்டில் விற்கும் இதுவே போதும்! 

0
253
How to get relief from painful urination
How to get relief from painful urination

சிறுநீர் கடுப்பு சரியாக ரோட்டில் விற்கும் இதுவே போதும்!

நீர் கடுப்பு எனும் நீர் சுருக்கு நோய்.

கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு தண்ணீர் அல்லது அதன் ஆதாரமாக திரவ உணவுகளை குடிக்காமல் இருப்பதால் உடலிலிருந்து சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி மற்றும் கடுப்பு ஏற்படலாம்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை உண்டாக்கும் இதை எளிதாக கிடைக்கும் பொருளை வைத்து சரி செய்யும் முறையை இங்கு பார்ப்போம்

தற்பொழுது பல இடங்களிலும் தேங்காய் பூ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் பெரும்பாலானோர் அதனை வாங்கி உண்ணுவதில்லை.அதற்கு மாறாக ஃபாஸ்ட் ஃபுட் போன்ற உணவு வகைகளை தான் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இந்த ஒரு பூவில் எவ்வளவு மகத்துவம் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத விசயமே.

தென்னை மரம் மூலமாக கிடைக்கும் தேங்காய், இளநீர் என அனைத்தும் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் தேங்காய் பூவை சாப்பிடுவதால் பருவ காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

pc

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மேலும் தேங்காய் பூவில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் இது பயன்படும். அதேபோல புற்றுநோயை உண்டாக்கும் ப்ரீ ரேட்டி கல்சை நம் உடலிலிருந்து வெளியேற்றவும் இந்த தேங்காய் பூ உதவும்.

தேங்காய் பூ சாப்பிடுவதால் இன்சுலின் அளவு தூண்டப்பட்டு ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கடத்தப்படும். மேலும் ஜீரணத்திற்கு மிகவும் இது உதவும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் தேங்காய் பூ சாப்பிடலாம்.

தேங்காய் பூவில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையானது இயல்பாகவே இதற்கு உள்ளது. மேலும் தேங்காய் பூவில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் முகம் சுருக்கம் போன்றவை ஏற்படாது தடுக்கும் பணியை செய்கிறது.

மேலும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் அதில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் தேங்காய் பூ சாப்பிடலாம். அந்தத் தொற்றுகளை வெளியேற்றவும் தேங்காய் பூ உதவும். மன உளைச்சலில் உள்ளவர்கள் அதிக அளவு சோர்வாக காணப்படுவர். அவ்வாறு இருப்பவர்கள் தேங்காய் பூ சாப்பிடுவதால் புத்துணர்ச்சி பெற முடியும்.

பெண்கள் தேங்காய் பூ உட்கொண்டால் வெள்ளைப்படுதல் முற்றிலும் நின்று போகும். அது மட்டும் இன்றி மாதவிடாய் அதிக நாட்கள் தொடர்ந்தால் அவர்களுக்கும் இந்த தேங்காய் பூ நல்ல மருந்தாக இருக்கும். தேங்காய் பூவும் உடல் சூட்டை குறைக்கும் தன்மை உடையது. மேலும் ஒரு சிலருக்கு மூக்கிலிருந்து அடிக்கடி ரத்தம் வெளியேறும். அதனை தடுக்கவும் தேங்காய் பூ சாப்பிடலாம்.

Previous articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்! 
Next articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!