“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

0
131
#image_title

“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

கேரளா உணவு வகைகளில் ஒன்று கதம்பக் கறி. முருங்கைக் காய், கேரட், பூசணிக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகளை வைத்து சமைக்கப்படும் உணவு ஆகும். இவை சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

இந்த கதம்பக் கறி கேரளா ஸ்டைலில் அதிக சுவையுடன் செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்

*முருங்கைக் காய் – 1

*கேரட் -1

*பூசணிக்காய் – 1/2 கப்

*கொத்தவரங்காய் – 20

*தேங்காய் – 1/4 கப்

*பச்சை மிளகாய் – 3

*உப்பு – தேவையான அளவு

தாளிக்க:-

*சீரகம் – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை சுத்தம் செய்து நீளவாக்கில்அரிந்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

காய்கறிகள் வெந்து வந்ததும் தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும். பின்னர் மிதமான தீயில் வேக விடவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானவுடன் 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெந்து கொண்டிருக்கும் காய்கறி கலவையில் சேர்க்கவும். பிறகு வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழைகளை தூவி விட்டு இறக்கவும்.

இவ்வாறு செய்தால் கதம்பக் கறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த கதம்பக் கறி சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleபெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!
Next articleஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!