கையேந்தி பவன் ஸ்டைல் தக்காளி சட்னி செய்யும் முறை!!

Photo of author

By Divya

கையேந்தி பவன் ஸ்டைல் தக்காளி சட்னி செய்யும் முறை!!

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டிருப்பதால் உணவில் தனி ருசி கொண்டிருக்கிறது.இந்த தக்காளி பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது.

இந்த தக்காளியில் சட்னி,சாதம்,பிரியாணி,குழம்பு,தொக்கு,ஊறுகாய் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் தக்காளி பழத்தை வைத்து கையேந்தி பவன் ஸ்டைல் தக்காளி சட்னி செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*பூண்டு – 7 பற்கள்

*வெங்காயம் – 2

*வர மிளகாய் – 10

*தக்காளி – 3

*வெல்லம் – சிறு துண்டு

*உப்பு – தேவையான அளவு

*காஷ்மீரி சில்லி பவுடர் – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – 1 தேக்கரண்டி

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1/4 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 2 கொத்து

*இட்லி மாவு – 2 தேக்கரண்டி

*பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை அளவு

செய்முறை:-

தக்காளி சட்னி செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கொள்ள வேண்டும்.அதில்
2 வெங்காயம்,1/2 தேக்கரண்டி சீரகம்,7 பூண்டு பற்கள் மற்றும் 10 வர மிளகாய் சேர்த்து அரைக்கவும்.பிறகு அதில் 3 தக்காளி பழம் சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் 1/4 தேக்கரண்டி கடுகு,1/4 தேக்கரண்டி உளுந்து,2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்க்கவும்.தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் தேவையான அளவு உப்பு,கஷ்மீரி மிளகாய்தூள்,சிறிதளவு வெல்லம்,சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

அடுத்து ஒரு பவுலில் 2 தேக்கரண்டி இட்லி மாவை ஊற்றி அதில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.இதை கொதிக்கும் கலவையில் ஊற்றவும்.பிறகு எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.இவ்வாறு செய்தால் கையேந்தி பவன் தக்காளி சட்னி போல் இருக்கும்.