கேரளா ஸ்டைல் முட்டை பிரட்டல் செய்வது எப்படி?

0
120
#image_title

கேரளா ஸ்டைல் முட்டை பிரட்டல் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் முட்டை பிரட்டல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*முட்டை – 4

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி

*வெங்காயம் – 1

*தக்காளி – 1

*மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*மஞ்சள் தூள் – சிறிதளவு

*இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி

*உப்பு – சிறிதளவு

*சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி

*கரம் மசால் – 1/4 தேக்கரண்டி

*தனி மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

*மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி

*மல்லி தழை – சிறிதளவு

*கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை…

**அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 4 முட்டை சேர்த்து அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் முட்டையின் ஓடுகளை நீக்கி இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

**அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் தூள் உப்பு மற்றும் மஞ்சள் சிறிதளவு சேர்த்து கலக்கி விடவும்.

**அடுத்து இரண்டாக நறுக்கி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து மிதமான தீயில் மெதுவாக கிளறி விடவும். மஞ்சள் மற்றும் உப்பு கலவை முட்டையில் இறங்கியதும் முட்டையை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

**அடுத்து முட்டை வதக்கிய எண்ணெயில் 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி ஒன்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

**அடுத்து 1/4 தேக்கரண்டி சீரகத் தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசால், 1/2 தேக்கரண்டி மல்லி தூள், 1/4 தேக்கரண்டி தனி மிளகாய் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

**பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலா கலவையை கொதிக்க விடவும். அடுத்து எண்ணெயில் வதக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து ஒரு கிளறு கிளறி சில நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.

**பின்னர் அடுப்பை அணைத்து சிறிதளவு கருவேப்பிலை மற்றும் வாசனைக்காக மல்லி தழை சேர்த்து கிளறவும். இவ்வாறு செய்தால் முட்டை பிரட்டல் மிகவும் சுவையாக இருக்கும்.