கேரளா ஸ்டைல் வெஜ் சொதி!! அட அட என்ன ஒரு சுவை!!
காய்கறிகள் வைத்து சொதி அதுவும் கேரளா முறைப்படி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*பச்சை மிளகாய் – 2
*இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
*கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
*பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கியது)
*உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)
*பச்சை பட்டாணி – 1 கப்
*கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
*நீர் போன்ற தேங்காய் பால் – 2 கப்
*உப்பு – தேவையான அளவு
*சர்க்கரை – 1 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
*பட்டை – 1 சிறிய துண்டு
*ஏலக்காய் – 2
செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் சிறு துண்டு பட்டை, 2 ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சில’நிமிடங்கள் வதக்கவும். அடுத்து 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி கொள்ளவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும். அதன் பின் பச்சை பட்டாணி மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்து வைத்துள்ள நீர் போன்ற தேங்காய் பாலை ஊற்றி கிளறி விடவும்.
காய்கறிகள் நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து பின் தயார் செய்து வைத்துள்ள கெட்டியான தேங்காய் பாலை அதில் ஊற்றி கிளறவும். இவ்வாறு செய்தால் வெஜ் சொதி சுவையாகவும், அருமையாகவும் இருக்கும்.