வாயில் வைத்ததும் கரையும் கேரள உண்ணியப்பம் – எவ்வாறு செய்வது?

0
121
#image_title

வாயில் வைத்ததும் கரையும் கேரள உண்ணியப்பம் – எவ்வாறு செய்வது?

Kerala Unniyappam: கேரளா மாநில மக்களின் விருப்ப இனிப்பு ;பண்டங்களில் ஒன்று உண்ணியப்பம். இவை பச்சரிசி, வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து செய்யப்படுகிறது. இவை அதிக சுவையுடன் கூடிய ஆரோக்கியமான பண்டமாகும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 1 கப்

*வாழைப்பழம் – 1

*வெல்லம் – 1/2 கப்

*ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை அளவு

*தேங்காய் துண்டுகள் – தேவையான அளவு

*நெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:-

1 கப் அளவு பச்சரிசி எடுத்து சுத்தம் செய்து மாவாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் 1/2 கப் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து அதை ஒரு பாத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும். அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை ஊற்றி கலந்து விடவும். அடுத்து வாசனைக்காக ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வாழைப்பழத்தை ஒரு பவுலில் போட்டு பிசைந்து கொள்ளவும்.

இந்த பிசைந்த வாழைப்பழத்தை பச்சரிசி மாவு கலவையில் போட்டு பிசைந்து கொள்ளவும்.
அடுத்து இதில் தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து நன்கு கரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பணியாரக்கல் வைத்து அவை சூடேறியதும் அதில் தேவையான அளவு நெய் ஊற்றிக் கொள்ளவும்.

அவை காய்ந்ததும் தயார் செய்து மாவை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி கொள்ளவும். பின்னர் அவை வெந்து வந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த கேரள உண்ணியப்பம் சாப்பிடுவதற்கு சுவையாகவும் அதிக வாசனையுடனும் இருக்கும்.

Previous articleகேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – சுவையாக செய்வது எப்படி?
Next articleஉங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்போ கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்!!