உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி? இந்த பதிவில் காணலாம்!

0
210

உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி? இந்த பதிவில் காணலாம்!

உருளைக்கிழங்கை பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் உள்ளவயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு மிக மிக அவசியம். மேலும் உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இவை மிகவும்நல்லது.

மேலும் உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : ப்ரெட் 10 துண்டுகள்,400 கிராம், உருளைக்கிழங்கு எட்டு பச்சை மிளகாய் , இரண்டு கொத்து மல்லிக்கீரை , இரண்டு கொத்து புதினா , இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் மசாலாத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒன்னே கால் கப் அரிசி மாவு ,தேவையான அளவு எண்ணெய் , தேவையான அளவு உப்பு . இந்த பொருட்கள் அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை :

உருளைக்கிழங்கு கபாப் செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கி விட்டு, நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ப்ரெட் துண்டுகள் ஒவ்வொன்றையும் நீரில் நனைத்து, உடனே எடுத்து, நன்றாக பிழிந்து உருளைக்கிழங்கோடு சேர்க்க வேண்டும். பிறகு பச்சை மிளகாய், மல்லிக்கீரை, புதினா ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனை எடுத்து மீதமுள்ள அனைத்து பொருட்களையும் அத்துடன் சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும், மேலும் சிறிய உருண்டைகளாக்கி நீள் உருளை வடிவில் உருட்டிகொள்ளவேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெயை சூடானதும், அதில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேன்டும்.

Previous articleஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஆறு உணவுகள் என்னென்ன தெரியுமா?
Next articleஎச்சரிக்கை: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவரா! இதை ஒரு முறை குடுத்துவிட்டால் உங்கள் ஜாதகமே அவங்க கையில்!