நாட்டுக் கோழியில் ரசம் செய்வது எப்படி?

0
114
#image_title

நாட்டுக் கோழியில் ரசம் செய்வது எப்படி?

அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் இறைச்சிகளில் ஒன்றான நாட்டுக் கோழியில் ரசம் எவ்வாறு தயார் செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக இறைச்சியில் மக்கள் அதிகம் பேரால் விரும்பி சாப்பிடுவது கோழி இறைச்சி ஆகும். கோழியில் தற்பொழுது பிராய்லர் கோழி அதிக விற்பனையில் உள்ளது. பிராய்லர் கோழியில் அதிக சத்துக்கள் கிடையாது. அதுவே நாட்டுக் கோழியில் அதிக சத்துக்கள் இருக்கின்றது.

நாட்டுக் கோழி இறைச்சி மற்றும் நாட்டுக் கோழி முட்டையில் மனித உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் இருக்கின்றது. நாட்டுக் கோழி இறைச்சி மற்றும் நாட்டுக் கோழி முட்டை இரண்டிலும் இதய நோய்களை தடுக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. மேலும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலங்களும், புரதச் சத்துக்களும் இருக்கின்றது. இந்த நாட்டுக் கோழியில் ரசம் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

நாட்டுக் கோழி ரசம் செய்ய தேவையான பொருட்கள்…

* நாட்டுக் கோழி கால்
* பூண்டு
* மிளகு
* ஏலக்காய்
* பிரிஞ்சி இலை
* பெரிய வெங்காயம்
* மிளகாய்த் தூள்
* கிராம்பு
* கொத்தமல்லித் தழை தண்டு
* கொத்தமல்லித் தழை
* மல்லித்தூள்
* கறிவேப்பிலை
* சீரகத்தூள்
* பாசிப்பருப்பு
* எண்ணெய்
* உப்பு
* பொடியாக நறுக்கிய தக்காளி
* மஞ்சள் தூள்
* சோம்பு

நாட்டுக் கோழி ரசம் தயார் செய்யும் முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் எண்ணெய் சேர்த்து கிராம்பு, ஏலக்காய், பூண்டு, பிரிஞ்சி இலை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக் கோழிக் கால் மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, கொத்தமல்லித்தழை தண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் இதில் மிளகாய்த்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

பின்னர் கோழிக்கால் பாதி வெந்த பிறகு இதில் பாசிப்பருப்பை கழுவி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 45 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

நன்கு வெந்த பின்னர் ஒரு பாவுலில் வடிகட்டி பரிமாறலாம். பரிமாறும் பொழுது இதில் சிறிதளவு சீரகத்தூள் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.