சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி?

0
97
#image_title

சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி?

சர்க்கரை பொங்கல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக விழாக்காலங்களில் சர்க்கரை பொங்கல் செய்து கடவுளுக்கு படைப்பதை நம் முன்னோர் காலத்திலிருந்து வழக்கமாக உள்ளது.

சரி வாங்க… எப்படி சர்க்கரை பொங்கல் சுவையாக செய்வது என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2 கப்

பாகு வெல்லம் – 2 கப்

முந்திரிப் பருப்பு – தேவையான அளவு

உலர்ந்த திராட்சை – தேவையான அளவு

பாசி பருப்பு – அரை கப்

ஏலக்காய் – சிறிதளவு

பச்சை கற்பூரம் – சிறதளவு

நெய் – 200 கிராம்

செய்முறை

முதலில் பச்சரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு பச்சரிசி மற்றும் பாசி பருப்பை குக்கரில் சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனையடுத்து, வேறு ஒரு பாத்திரத்தில் 1 கப் பாகு வெல்லத்தை சேர்த்து அதில் ஏலக்காய்யை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பாகு நன்றாக கொதித்ததும் அதில் வேக வைத்து எடுத்த பச்சரிசியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சையை வறுத்து சர்க்கரை பொங்கலில் சேர்த்து இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.

 

 

Previous articleஇதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!!
Next articleநான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!