வாய் துர்நாற்றத்தால் அவதி படுகிறீர்களா? அப்படி என்றால் இதை செய்யுங்கள்

0
304

வாய் துர்நாற்றத்தால் அவதி படுகிறீர்களா? அப்படி என்றால் இதை செய்யுங்கள்

வாய் மணக்க, மணக்க பேசுவார்கள் என்று பேச்சுவழக்கில் சொல்ல நாம் கேள்வி பட்டிருப்போம். அப்படி மணக்க மணக்க பேசுபவர்களை நாம் கண்டிருக்கிறோமோ இல்லையோ, ஆனால் பேசும் போது துர்நாற்றம் அடிக்கும் அனுபவத்தை நம்மால் பிறரோ, பிறரால் நாமோ நிச்சயம் பெற்றிருப்போம்.

அப்படி வாய் துர்நாற்றத்தால் இன்னல் அனுபவிப்வர்களுக்கு தான் இந்த சிறப்பு கட்டுரை.

முதலில் வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது என பார்ப்போமா?

பெரும்பாலும் வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும்.

அதாவது வயிற்று புண் (Ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இடது இருக்கும்

மருத்துவ ரீதியாக தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.

அசீரண கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக துர்நாற்றமாக வெளிப்படும்.

இந்த வழிகளை பின்பற்றி வாய் துர்நாற்றத்திலிருந்து தப்பலாம்:

  • உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். சூயிங்கம், போதையில்லா பாக்குகளை பயன்படுத்தலாம்.
  • Mouth Refreshner போன்ற நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
  • கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
  • அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம்.
  • எலுமிச்சை சாற்றுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • குடல்புண் பிரச்னையால் தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் தேநீர் / காபி போன்றவற்றை தவிர்த்துவிட்டு 4 குவளை தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுற்றப்படுவதோடு குடல் புண் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
  • காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க் கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
  • அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
  • சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். சாப்பிட்ட பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்து விடுங்கள்.
  • சாப்பிட்ட பின் வாய்க் கொப்பளிக்காமலிருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு உறங்க செல்லும் முன் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.
  • கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதேபோல ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.
  • இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • மேலும் இரவு நீண்ட நேரம் கண் விழித்து படிப்பவர்கள், கணினியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும்.

இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் நிச்சயம் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம்.

வாய் துர்நாற்றம் நீங்க,வாய் துர்நாற்றம் சித்த மருத்துவம்,வாய் துர்நாற்றம் அறிகுறிகள்,வயிற்றுப்புண் வாய் துர்நாற்றம்,வாய் துர்நாற்றம் நீங்க,கடுமையான வாய் துர்நாற்றம்,தொண்டை துர்நாற்றம்,சொத்தை பல் வாய் துர்நாற்றம்

Previous article5 நாட்களில் தொப்பை குறைய! சூப்பர் ட்ரிங்க் கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
Next articleஉடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கும் இயற்க்கை உணவுகள்