குளிர்காலத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் “இஞ்சி சொரசம்” தயார் செய்வது எப்படி?

Photo of author

By Gayathri

இன்றைய சமூகத்தில் அஜீரணக் கோளாறை பலர் எதிர்கொள்கின்றனர்.மோசமான உணவுப் பழக்கங்களால் குளிர்காலத்தில் செரிமானப் பிரச்சனையால் ஏராளமானோர் அவதியடைந்து வருகின்றனர்.இந்த செரிமானப் பிரச்சனையை இஞ்சி சொரசம் சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம். இஞ்சி சொரசம் செய்வது குறித்த முழு விளக்கம் இதோ.

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி துண்டுகள் – இரண்டு
*வர மல்லி – 3 தேக்கரண்டி
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*வெல்லம் – ஒரு துண்டு
*எலுமிச்சம் பழசாறு – இரண்டு தேக்கரண்டி
*தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் விரல் சைஸில் இரண்டு இஞ்சி துண்டுகளை எடுத்து தோல் நீக்கிகொள்ளவும்.பிறகு இதை தண்ணீர் போட்டு மண் இன்றி சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுத்து கிண்ணம் ஒன்றை எடுத்து மூன்று தேக்கரண்டி வர மல்லி,ஒரு தேக்கரண்டி சீரகத்தை போட்டு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

பிறகு மிக்சர் ஜாரை கழுவி சுத்தம் செய்து இஞ்சி துண்டுகளை பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு நீரில் ஊறவைத்த கொத்தமல்லி விதை மற்றும் சீரகத்தை அதில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு இதனை சிறிது தண்ணீர் விட்டு மைய்ய அரைத்தெடுக்க வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி பழத்தின் சாறை அதில் பிழிந்துவிடவும்.

அதன் பிறகு ஒரு துண்டு வெல்லத்தை இடித்து பொடியாக்கி அதில் சேர்க்கவும்.இறுதியாக ஒரு தேக்கரண்டி தேனை அதில் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.இஞ்சி சொரசம் தொண்டை வலிக்கு சிறந்த தீர்வாக உள்ளது.உங்களுக்கு வறட்டு இருமல் பிரச்சனை இருந்தால் இஞ்சி சொரசம் செய்து சாப்பிடுங்கள்.

தலைசுற்றல்,வாந்தி மற்றும் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.வயிறு உப்பசம்,வயிறுக்கோளாறு உள்ளவர்கள் இஞ்சி சொரசம் செய்து சாப்பிட்டு வந்தால் ஓரிரு தினங்களில் பலன் கிடைக்கும்.