நரை முடியை கருமையாக்க மூலிகை ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி?

0
219
#image_title

நரை முடியை கருமையாக்க மூலிகை ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மாசுபாடு உணவுப் பழக்கம் போன்றவற்றால் தலைமுடி சிறு வயதிலேயே நரைக்கத் தொடங்கிவிடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறோம். இந்த நரைமுடி பிரச்சனையை சரி செய்ய வீட்டில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம்.

வெள்ளை முடியை கருப்பாக்க எண்ணெய் தயாரிப்பது எப்படி

தேவையான பொருட்கள்:-

*கறிவேப்பிலை

*வெந்தய விதைகள்

*நைஜெல்லா விதைகள்

*வெங்காயம் தோல்கள்

*கடுகு எண்ணெய்

செய்முறை…

முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி வெந்தயம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி வெங்காயத் தோல்கள், 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் விதைகளை போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆறவிட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியுடன் 3 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து இந்த பேஸ்ட்டை விடவும். இந்த எண்ணெயை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி 1 மணி நேரம் வரை ஊறவிடவும். பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.