எச்சரிக்கை! இதுதான் மாரடைப்பின் அறிகுறி!! மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்வது?

Photo of author

By Amutha

எச்சரிக்கை! இதுதான் மாரடைப்பின் அறிகுறி!! மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்வது?

நம்மில் நிறைய பேர் மாரடைப்புக்கான அறிகுறிகளை மிஸ் பண்ண வேண்டிய வாய்ப்புகள் உள்ளது. நெஞ்சு வலி தான் மாரடைப்பின் முக்கிய அறிகுறி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாரடைப்பின் அறிகுறிகள் வேறு வகையில் வெளிப்படலாம். பெண்களுக்கு, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வேறு வகையில் மாரடைப்பு ஏற்படலாம். எனவே மாரடைப்பின் ஆரம்ப கால அறிகுறி என்ன? என்ன? எப்படி ஏற்படுகிறது?எப்படி கண்டறியலாம்? அதற்கான முதலுதவி என்ன என்பதை பார்ப்போம்.
அறிவியலின் படி இந்த உலகில் அதிகமானவர்கள் இருக்க காரணமாக இருப்பது மாரடைப்பு தான். இந்த மாரடைப்பினால் ஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உலகில் உயிரிழக்கின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் 22 லட்சம் இந்த மாரடைப்பினால் உயிரிழக்கின்றனர். மாரடைப்பு பொறுத்தவரை ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்தால் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

மாரடைப்பை பொறுத்தவரை அறிகுறிகள் ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம் கோல்டன் அவர்ஸ் என்பர். ஒரு மணி நேரத்திற்குள் தென்பட்ட உடனடியாக நோயாளியைகொண்டு வந்தால் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி விட முடியும். 90% வரை வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக அறிகுறிகள் தென்பட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் கழித்துதான் கொண்டு செல்கின்றோம். ஆரம்ப அறிகுறிகள் என்பதை நாம் சரியாக தெரிந்துகொண்டால் சரியான நேரத்தில் சென்று காப்பாற்றி விடலாம்.

பொதுவாக மாரடைப்பு வருவது எதனால் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் இதயம் தான் ரத்தத்தை வழங்குகிறது. ஆனால் அந்த இதயம் துடிக்கவும் ரத்த குழாய்கள் தேவை. அவை வலது ஏட்ரியம் மற்றும் இடது ஏட்ரியம். இந்த ரத்தக்குழாய்களில் திராம்போசிஸ் எனப்படும் கொழுப்பு கட்டிகள் அடைத்து நமக்கு வலி ஏற்படுகிறது. முழுவதும் அந்த கட்டிகள் இரத்தக் குழாய்களை அடித்துக் கொண்டால் இதய தசைகள் செயல் இழந்து போகும். இதய தசைகள் செயலிழந்து போனால் மாரடைப்பு ஏற்படுகின்றது.

மாரடைப்பு ஏற்படும்போது ஏழு முக்கிய அறிகுறிகள் தெரியும்.
1. நெஞ்சு வலி மாரடைப்பின் பொதுவான அறிகுறி இதுதான் ஒரு யானை நம் மீது ஏறி மிதித்தால் எந்த அளவு வலி உணர்கிறோமோ அதே அளவு நெஞ்சு வலி இருக்கும்.
2. வலி உடலுக்கு பரவுவது போல் தோன்றும். அதாவது இடது பக்கம் மரத்துப்போனது போல் இருக்கும்.
3. வயிற்றுப்பகுதியில் கூட வலி உண்டாகும்.
பெண்களுக்கு அதிகம் வயிற்று வலியே உண்டாகும். முதுகு முதுகு பக்கமும் வலி பரவும் மேலும் தாடை பகுதிகளிலும் பரவும்.
4. மிக அதிகமான குளிர்ச்சியான வியர்வை. மாரடைப்பு ஏற்படும்போது நிறைய வேர்க்கும்.
5. வாந்தி வருவது போன்ற உணர்வு.
6. மூச்சு விடுதலில் சிரமம்.
7. மயக்கம் வருவது போல் தோன்றும். தலை சுற்றுதல் போன்ற உணர்வு ஏற்படும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் நாம் தாமதப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மாரடைப்பு வராமல் எப்படி தடுக்க
1. ரத்த அழுத்தம்சரியான முறையில் பராமரித்தால் மாரடைப்பு கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதன் மூலம் 50 சதவீதம் மாரடைப்பு கட்டுக்குள் வரும்.
2. உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி
3. இது இதயத்திற்கு பலன் தரும் உணவுகள்.
4. ஆல்கஹால், புகைப்பிடித்தல் தடுப்பது நல்லது.
5. சர்க்கரை வியாதியை கட்டுக்குள் கொண்டு வருவது நல்லது. ஏனெனில் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஹார்ட் அட்டாக்கிற்கான எந்த அறிகுறியும் தெரியாது.

ஹார்ட் அட்டாக் வந்தவுடன் செய்ய வேண்டியது,
இதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் அவர்களை நல்ல காற்றோட்டமான இடத்தில் அமைதியாக அமர வைக்கவும். அவர்கள் பயப்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
ஏற்கனவே இதய நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால் அதை சாப்பிடவும்.
தற்போது பொதுவாக ஆஸ்பிரின் மாத்திரை 300 மில்லி கிராம் சாப்பிடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தோடு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிகவும் நல்லது. ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் உடனடியாக காப்பாற்றப்படலாம்.