அயராது உழைத்து சம்பாதித்த பணத்தை சிக்கனமாக சேமிப்பது எப்படி?

Photo of author

By Sakthi

பொதுமக்களே தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிப்பு மற்றும் முதலீடுகள் மூலமாக பெருக்க நினைக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியமாகிறது. ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த பணத்தை தவறான முதலீடுகள் அல்லது சேமிப்பு திட்டங்களில் செலுத்தி ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்கு சம்பாதித்த பணத்தை மிகுந்த கவனத்துடன் நிர்வகிப்பது மிகவும் அவசியம்.

இதற்கு முதலில் வீண் செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்கும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

என்னதான் தங்களிடம் பணத்தை சேமிக்கவும், செலவுகளை சிக்கனப்படுத்தவும், நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தாலும் கூட பைனான்ஸ் சந்தைகளில் இருக்கின்ற சில நிதி திட்டங்கள் உங்களுடைய பணத்தை மோசடி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பணத்தை சேமிக்க விரும்பும் நபர்கள் தெரியாமல் கூட இதில் சிக்க கூடாத 5 நிதி பொறிகள் தொடர்பாக இங்கே நாம் காணலாம்.

தேவை மற்றும் ஆசை

மாதம் தோறும் நிதிநிலையை உருவாக்கும் போது அந்த பட்டியலில் முதலில் தேவையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். தேவைகள் என்பது உயிர் வாழ்வதற்கான அடிப்படை தேவையான விஷயங்கள், தேவைகளின் கீழ்வரும் செலவுகளை முதலில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதோடு தேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நிதி நிலையை ஒதுக்கி கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக 4 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு வருமானத்தில் 10% தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யலாம். இதில் ஒரு நபர் சம்பாதிக்கத் தொடங்கினால் அவர் தேவைகளுக்காக குறைந்த பட்ஜெட்டை அமைத்து மீதம் இருக்கின்ற தொகையை சேமிப்பிற்காக ஒதுக்கிக் கொள்ளலாம்.

ஆங்கரிங்

ஆங்கரிங் என்பது ஒரு பங்கிற்கு மதிப்பை அமைத்து பயன்படுத்தக் கூடியதாகும். இது நிதியில் ஆய்வாளர் அல்லது முதலீட்டாளர்கள் போன்ற நிதி தந்தை பங்கேற்பாளரை மிகைப்படுத்தப்பட்ட முதலீட்டை வாங்குதல் அல்லது குறைவான மதிப்பிற்குட்பட்ட முதல் இடை விற்பனை செய்வது உள்ளிட்ட தவறான நிதியின் முடிவை மேற்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு பொருளின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விலை 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் அதன் உண்மையான மதிப்பு 50 ரூபாயாக இருந்தாலும் மக்கள் பரிந்துரைக்கப்பட்ட விலையை வைத்து பொருளின் மதிப்பு அதிகம் என நினைத்து விடுகிறார்கள்.

கிரெடிட் கார்டு

இந்த வலைதலை யுகத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது மிகவும் பயனுள்ளதாக மாறி இருக்கிறது. இது நிதியை நிர்வாகம் செய்யவும், பொருட்களை வாங்கும் போது தள்ளுபடி மற்றும் இலவசங்களை பெறவும், உதவிகரமாக இருக்கிறது. ஆனாலும் கூட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் நாம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை அனைவரும் மறந்து விடுகிறோம்.

சலுகை இருப்பதன் காரணமாக, தேவையில்லாத பொருட்களை கிரெடிட் கார்டு மூலமாக வாங்கி குவித்து விடுகிறோம். கிரெடிட் கார்டுகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் 20 முதல் 40 சதவீதம் வரையில் வட்டி இருக்கிறது. அதனை நாம் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும், ஆகவே கடன் தொகையை மனதில் வைத்துக் கொண்டு கிரெடிட் கார்டை தேவையான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முதலீடாக மாறும் காப்பீடு

நமக்கோ அல்லது நம்முடைய குடும்பத்தைச் சார்ந்தோருக்கோ ஏதாவது திடீரென பிரச்சனை உண்டானால் நமக்கு உதவும் ஒரு அத்தியாயம் தான் காப்பீடு. ஆனால் உங்களுடைய காப்பீடு உங்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. காப்பீடு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து சேமித்த பணத்தை சரியான முதலீடுகளில் முதலீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

நகை முதலீடுகள்

பெரும்பாலான சமயங்களில் நகைகள் முதலீடாக கருதப்படுகிறது. ஆனாலும் இது ஒரு நல்ல முதலீடு கிடையாது. ஏனென்றால் தனி நபரால் அணியப்படும் தங்க நகைகள் தேய்மானம் மற்றும் சேதாரம் உள்ளிட்டவை காரணமாக, குறைந்த மதிப்பை பெறுகின்றன.

ஆகவே நகைகளை வைத்திருப்பதை விட அரசின் பேப்பர் கோல்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஏனென்றால் இதை நல்ல வருமானம் தரக்கூடியவையாகும்.