கழுத்து பகுதியில் தொங்கும் கொழுப்பு சதையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

கழுத்து பகுதியில் தொங்கும் கொழுப்பு சதையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

தடிம தாடை பிரச்சனை: Double chin

ஆரோக்கியமற்ற உணவுமுறை,உடல் நலக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் நமது உடலில் வயிறு,இடுப்பு,தொடை பகுதிகளில் தேவையற்ற சதைகள் இருப்பதை போல் கழுத்து பகுதியிலும் சதை(Double chin) தொங்கும்.இதனால் முக அழகு கெட்டு வயதான தோற்றத்தை கொடுக்கும்.ஆகவே கழுத்து பகுதியில் காணப்படும் தேவையற்ற சதைகளை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

கழுத்து பகுதியில் தொங்கும் கொழுப்பு சதையை குறைப்பது எப்படி? How to reduce double chin fat in tamil

டிப் 01:-

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதனுள் இருக்கின்ற ஜெல்லை தனியாக பிரித்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து குடித்து வந்தால் கழுத்து பகுதியை சுற்றி இருக்கின்ற சதைகள் கரைந்து விடும்.

கற்றாழை ஜெல்லை நன்கு அலசி சுத்தம் செய்த பின்னர் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

டிப் 02:-

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி ஆளி விதை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஆளிவிதை நீரை ஊற்றி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் சேர்த்து பருகி வந்தால் கழுத்தை சுற்றியிருக்கும் தேவையற்ற சதைகள் கரைந்து விடும்.

டிப் 03:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கடலை மாவு,ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி சேர்த்து கலந்து விடவும்.பிறகு அதில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து விடவும்.பிறகு ஒரு தேக்கரண்டி தயிர் மட்டும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இந்த பேஸ்டை கழுத்தை சுற்றி அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்தால் தேவையற்ற சதைகள் கரையும்.