வாயை சுற்றி கருப்பா இருக்கா? கவலைய விடுங்க இதை செய்தால் போதும்..!!

0
140
Black Pigmentation on Mouth

அனைவருக்கும் அவர்களின் முகத்தை பராமரித்து கொள்வதென்றால் பிடிக்கும். குறிப்பாக முகத்தில் சிறு பருக்கள், கரும்புள்ளிகள் வந்துவிட்டால் போதும் உடனடியாக மருந்து கண்டுப்பிடித்து  அதனை நீக்குவதற்கு படாத பாடு பட்டு எப்படியும் நீக்கிவிடுவார்கள். அவ்வாறு இருக்கையில் கண்களை சுற்றி கருவளையம் வருவது, உதட்டை சுற்றி கருமையாக வருவதை பார்க்கும் நமக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கும். அதிலும் வாயை சுற்றி ஏற்படும் கருமை நிறத்தை (Black Pigmentation on Mouth) போக்குவதற்கு சில எளிமையான டிப்ஸ் என்ன என்பதை பார்க்கலாம்.

வாயை சுற்றி உள்ள கருமையை போக்க

வாயை சுற்றி இருக்கும் கருப்பான பகுதியை (Hyperpigmentation Around Mouth In Tamil) தான் நாம் பிக்மன்டேஷன் என்று கூறுகிறோம். இந்த கருப்பான பகுதி ஏன் உருவாகிறது என்றால் ஒரு சிலருக்கு ஹார்மோன் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு அந்த இடத்தில் மட்டும் மெலனின் உற்பத்தி அதிகமாக காணப்படும்.

மேலும் ஒரு சிலருக்கு அவர்கள் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்களின் ஒவ்வாமையால் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு வாயை சுற்றி வறண்டு போவதாலும் இது ஏற்பட்டிருக்கும்.

இதனை நீக்குவதற்கு முதலில் நீங்கள் தக்காளியை இரண்டு துண்டாக வெட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதன்பிறகு வாயை சுற்றியுள்ள இறந்த செல்கள் இதன் மூலம் நீங்கிவிடும். இவ்வாறாக நீங்கள் நாள்தோறும் செய்து வரலாம்.

பிறகு காய்ச்சாத பாலில் எலுமிச்சை சாறு கலந்து அதனை வாயை சுற்றி நன்றாக தேய்த்து விட வேண்டும். அது இறந்த செல்களை உடனடியாக நீக்குகிறது. மேலும் ஒரு சிலருக்கு எலுமிச்சை சாறு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அவர்கள் கவனமுடன் பார்த்து உபயோகிக்கவும்.

ஒரு கிண்ணத்தில் தயிர், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், தேன் ஆகியவற்றை சேர்த்து கலந்து வாயை சுற்றி அப்ளை செய்து நன்றாக தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி வாய் வெண்மை நிறத்தில் மாறிவிடும்.

மேலும் படிக்க: உங்கள் முகம் பார்ப்பதற்கு சுருங்கி போய் உள்ளதா? இந்த 2 பொருள் போதும் முகம் சுருக்கம் மறைந்துவிடும்..!!