சாமி கும்பிடும் போது கண்ணீர் வருகிறதா? கொட்டாவி வருகிறதா? அப்போ கடவுள் என்ன சாெல்ல வருகிறார்..!!

0
93
kottavi vara karanam

பொதுவாக நம்மில் பலருக்கும் இங்கு சாமி கும்பிடும் போது அழுகை வரும். அதாவது நம்மையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வரும். ஒரு சிலருக்கு கொட்டாவி (kottavi vara karanam)  வரும். இதனை பார்ப்பவர்கள் இவருக்கு சாமி வர போகிறது என்று கூறுவார்கள். நாமும் சிலரை பார்த்திருப்போம். ஒரு சிலர் சாமி கும்பிடும் போது அழுவார்கள் பிறகு கொட்டாவி வந்து சாமி வந்து ஆடுவார்கள்.

நாம் இந்த பதிவில் சாமி கும்பிடும் போது ஏன் அழுகை வருகிறது. கொட்டாவி வருகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

கண்ணீர் வர காரணம்

பொதுவாக ஒருவர் கஷ்டப்படும் போது அவருக்கு கடவுளை தவிர வேறு யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பார்கள். கடவுள் ஒருவர் தான் அவரின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும் என்று நினைப்பார்கள். அப்படி இருக்கும் போது அவரிடம் சொன்னால் மட்டுமே கவலை தீரும் என மனக்கண்ணால் அவர் முன் நின்று அனைத்தையும் சொல்லவும் முடியாமல் நிற்கதியாக நிற்கும் பொழுது தங்களையும் அறியாமல் கண்ணீர் வருகிறது.

மேலும் கடவுளை கண்கள் திறந்து வழிபட்டால் இது சற்று குறையும். கண்களை மூடி அவரை மனக்கண்ணில் நினைத்து பிரச்சனைகளை சொல்லும் போது தங்களையும் அறியாமல் கண்ணீர் வருகிறது. இருந்தபோதும் சாமி கும்பிடும் போது அழுகை கூடாது என கூறுவார்கள்.

கொட்டாவி  – kottavi vara karanam

பொதுவாக கொட்டாவி என்பதை நாம் கெட்ட ஆவி என்று தான் கூறுவோம். காலப்போக்கில் இது காெட்டாவி என்றாகிவிட்டது. சிலருக்கும் இங்கு யாராவது கொட்டாவி விட்டால் அவருக்கும் வரும். சிலருக்கு இதனை படித்துக்கொண்டிருக்கும் போது கூட வரலாம். அதற்கு எல்லாம் நம் மூளை தான் காரணம்.

மேலும் ஒருவருக்கு கொட்டாவி வருவதற்கான காரணம் என்னவென்றால், அது அவர்களின் உடல் அசதியினால் ஏற்படும். அப்பாேது நம் மூளை கொட்டாவி மூலம் வெளிப்படுத்தி நம்மை உறங்க சொல்லும். இருந்த போதிலும் ஏன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டால் மட்டும் கொட்டாவி வருகிறது என்று பார்த்தால், எப்போதும் கோயிலில் நேர்மறை ஆற்றல் மட்டும் தான் இருக்கும். அங்கு நாம் செல்லும் போது ஒரு சிலருக்கு அவர்கள் உடம்பில் இருக்கும் கெட்ட ஆவி (எதிர்மறை ஆற்றல்) வெளிப்பட்டு கொட்டாவியாக வெளியில் வருகிறது.

சிறிது நேரத்தில் அது சரியாகிவிடும். இருந்தபோதிலும் இது போன்று கொட்டாவி விட்டும் போது நாம் கைக்குட்டையால் வாயில் வைத்துக்காெள்ள வேண்டும். கெட்ட ஆவி தான் வெளியில் வருகிறது என்பதால் அது மற்றவர்களை பாதிக்காமல் இருக்க வேண்டும். பிறகு உங்கள் உடல் கோயிலில் இருக்கும் நேர்மறை ஆற்றலுக்கு தயார்படுத்திக்கொள்ளும்.

மேலும் படிக்க: கோயில் பூஜையில் ஆட்டு ரத்தம் குடித்த நபர் உயிரிழப்பு..!!