பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவது எப்படி? அட இத்தனை நாளா இதை எப்படி தெரிஞ்சிக்கமால் விட்டோம்!!

0
126
#image_title

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவது எப்படி? அட இத்தனை நாளா இதை எப்படி தெரிஞ்சிக்கமால் விட்டோம்!!

நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அவை வெண்மையாக இருந்தால் நமக்கு பேசுவதற்கு தன்னம்பிக்கை ஏற்படும்.ஆனால் இன்றைய உணவுகள் பற்களை பல்வேறு விதத்தில் சேதப்படுத்தி வருகிறது.விரைவில் சொத்தை உருவாகுதல்,மஞ்சள் பற்கள்,அதிகளவு கிருமிகள் என்று நம் பற்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இதனை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.அதே போல் தான் மஞ்சள் நிற பற்களை சரி செய்வதற்கான முறையான வழிகளை கடைபிடிக்க வேண்டும்.இதற்கு 1000 கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசயம் இல்லை.வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் மஞ்சள் பற்களை வெள்ளை நிறத்திற்கு அழகாக மாற்ற முடியும்.

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – 1 தேக்கரண்டி(துருவியது)

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

*உப்பு – 1/2 தேக்கரண்டி

*டூத் பேஸ்ட் – சிறிதளவு

செய்முறை:-

1.முதலில் ஒரு பவுலில் துருவிய இஞ்சி 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.

2.ஒரு எலுமிச்சை பழத்தில் பாதி எடுத்து 2 தேக்கரண்டி அளவு சாறு பிழிந்து இஞ்சி துருவி வைத்துள்ள பவுலில் சேர்க்கவும்.

3.பின்னர் சமயலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பு 1 தேக்கரண்டி மற்றும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிதளவு சேர்த்து நன்கு குழப்பி கொள்ளவும்.

4.செய்து வைத்துள்ள இந்த பேஸ்டை பல் துலக்க பயன்படும் பிரஸில் சேர்த்து நன்கு துலக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மஞ்சள் பற்கள் வெண்மை நிறத்திற்கு மாறி விடும்.

Previous article10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!
Next articleவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!