மனிதர்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய மற்றும் அவசியம் தேவைப்படக் கூடிய ஒன்றுதான் உறக்கம்.தினமும் நம் உடலுக்கு தூக்கத்தின் மூலம் ஓய்வை கொடுக்கின்றோம்.நாம் பெரும்பாலும் இரவு நேர உறக்கத்தைதான் அனுபவிக்கின்றோம்.இருப்பினும் அந்த உறக்கம் நல்ல உறக்கமா இல்லையா என்று நாம் ஒருநாள் சிந்தித்தது இல்லை.மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்று.
உறக்கத்தின் பொது கனவு வருவது இயல்பான ஒரு விஷயம்தான்.இருப்பினும் கனவு வந்தால் அவை நல்ல தூக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நாம் கனவு வராமல் தூங்குவதுதான் உண்மையான தூக்கம்.கனவு மற்றும் தொந்தரவுகள் எதுவும் இல்லாமல் 3 மணி நேரம் தூங்கினாலும் அது நல்ல தூக்கம்தான்.
சிலர் இரவில் சிறிது நேரம் மற்றும் பகலில் மதிய நேரத்தில் தூங்கிவிட்டு 8 மணி நேரம் தூங்கிவிட்டேன் என்று கூறுகின்றனர்.இப்படியான சீரற்ற தூக்கம் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.சிலர் நேரம் கடந்து தூங்கி அதிகாலை நேரத்தில் எழுகின்றனர்.இப்படி பெரும்பாலும் பெண்கள்தான் உறங்குகின்றனர்.அதிக வேலை காரணமாக பெண்கள் தங்கள் உறக்கத்தை தொலைக்கின்றனர்.
சிலருக்கு தூக்கம் என்பதே இல்லாத நிலைதான் உள்ளது.சிலர் இரவு நேர தூக்கத்தை தொலைத்துவிட்டு பகல் நேரத்தில் உறங்குகின்றனர்.ஆனால் பகல் நேரத்தில் 8 மணி நேரம் உறங்கினாலும் இரவு நேர உறக்கம்தான் சிறந்தது.
அதேபோல் நல்ல உறக்கத்தை அனுபவிக்க இரவில் 10 நிமிடங்கள் தியானம்,யோகா போன்றவை செய்ய வேண்டும்.நன்றாக மூச்சு பயிற்சி செய்த பிறகு படுத்தால் கனவு இல்லாமல் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம்.தியானம் செய்தால் நல்ல தூக்கம் வரும்.தூங்குவதற்கு முன் எதிர்மறை சிந்தனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.