சீரகத்தை எப்படி எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது?? மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

உணவில் சேர்க்கும் சீரகம் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக உள்ளது.இந்த சீரகத்தை ஊறவைத்து பானமாக பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நாம் தினமும் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தாக இருக்க வேண்டும்.குறிப்பாக வெறும் வயிற்றில் அருந்தும் பானங்கள் ஆரோக்கியம் நிறைந்தவையாக இருக்க வேண்டும்.ஆனால் பலர் காபி,டீ போன்ற பானங்களையே அதிகம் குடிக்கின்றனர்.இதனால் வயிறு எரிச்சல்,பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

டீ,காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது.இதற்கு மாற்று எலுமிச்சை தேநீர்,சீரக நீர் போன்ற ஆரோக்கியமான பானங்களை பருகலாம்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சீரக நீர் பெரிதும் உதவுகிறது.சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி பருகி வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.இதைவிட சூடான நீரில் சீரகத்தை ஊறவைத்து பருகி வந்தால் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நீரை 10 நிமிடங்களுக்கு ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

சீரக நீரால் உடலில் தேங்கும் தேவையற்ற கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.வெறும் வயிற்றில் சூடான சீரக நீர் பருகுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க சீரக நீர் பருகலாம்.