“விஜய் சேதுபதியின் நடிப்பை என்னால் தொடமுடியாது…” பாலிவுட் நடிகர் கருத்து
விக்ரம் வேதா திரைப்படம் அதே பெயரில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மிகப்பெரிய் வெற்றிப்படமாக அமைந்தது.விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்திய படமாக விக்ரம் வேதா அமைந்தது. நடிகர் மாதவனுக்கும் இறுதி சுற்று படத்துக்குப் பிறகு ஒரு ரி எண்ட்ரி படமாக அமைந்தது. இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இணையர் இயக்க, சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.
இந்த படம் தற்போது அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி வேடத்தில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க மாதவன் வேடத்தில் சைஃப் அலிகான் நடித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு முடிந்த நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ரிலீஸாகி கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “ படத்தில் விஜய் சேதுபதி வேதா கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்று எனக்கு தெரியும். அவர் நடிப்பை என்னால் தொடமுடியாது” எனக் கூறியுள்ளார்.
வட இந்தியாவில் பொன்னியின் செல்வன் படத்துக்கு கடும்போட்டியாக விக்ரம் வேதா திரைப்படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. படத்துக்கு முந்தைய எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.