வயிற்று வலி என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 7 கிலோ எடையுள்ள முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த சுவீட்டி குமாரி என்ற 17 வயதே ஆன சிறுமி ரொம்ப நாளாக வயிற்று வலியால் துடித்து உள்ளார்.
அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு புற்றுநோயாக இருக்கலாம் என கருதி அறுவை சிகிச்சை செய்து விடலாம் என கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள அந்த பொருளை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் பெண்ணின் வயிற்றில் 7 கிலோ எடையுள்ள மூடி பந்துபோல இருந்துள்ளது.
இது எப்படி என்று விசாரித்த பொழுது, அந்த பெண்ணுக்கு தனது முடியை கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் அந்தப் பெண் கடித்து முழுங்கிய அந்த முடி உள்ளே சென்று ஒரு ஏழு கிலோ எடையுள்ள ஒரு பந்து ஆக மாறியுள்ளது.
6 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அந்த முடியினை அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் 40 வருடங்கள் மருத்துவராக இருந்த அனுபவத்தில் இப்படி ஒரு விஷயத்தை இதுவரை பார்த்ததில்லை என கூறியுள்ளார்.