பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்!

0
254

தாய்லாந்தில் யானை ஒன்று மிகவும் பசியுடன் இருந்ததால் சமையல் அறையின் சுவரை உடைத்து சமையல் பொருட்களை எடுத்துச் சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்! பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்!
தாய்லாந்து நாட்டில் ராட்சவடன் என்கின்ற என்பவர் சலர்ம் கீட்பத்தனா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். திடீரென நள்ளிரவில் வீட்டில் சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் வருவதை உணர்ந்து உள்ளார். திடீரென்று எழுந்து உள்ளார். உடனே சத்தம் வந்த திசையை நோக்கி சமையலறைக்குச் சென்ற பார்த்தவுடன் அவர் அதிர்ந்து போயுள்ளார்.

அங்கு அவர் வீட்டின் சமையலறை சுவரை உடைத்த பூன்சுவே என்ற யானையைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கு வந்த யானை சமையலறை சுவரை இடித்து உள்ளே வந்துள்ளது.

வீட்டுச் சுவரை உடைத்து அதுமட்டுமில்லாமல் உள்ளே உள்ள சமையல் பொருட்களை தனது தும்பிக்கையால் எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர் தனது செல்போனில் யானை உணவு சாப்பிடுவதை படம் பிடித்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளார்.

அந்த நாட்டில் உள்ள தேசிய பூங்காவில் உள்ள பூன்சுவே என்ற யானை அடிக்கடி உணவு தேடி கிராமத்திற்குள் வருவதால் மிகவும் பிரபலம் ஆகவே அறியப்பட்டது.

அங்கு வந்து கிராமத்திற்குள் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதால் மக்களுக்கு மிகப் பிரபலமாக பூன்சுவே யானையை தெரியவந்துள்ளது.

இருந்தாலும் வீட்டு சுவர் எல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.

Previous articleவயிற்றில் எட்டி உதைத்து, முகத்தில் கால் வைத்து அழுத்தி கொடுமையின் உச்சகட்டம்! கேரளாவில் பரபரப்பு!
Next articleமுருகேசன் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here