வயிற்றில் எட்டி உதைத்து, முகத்தில் கால் வைத்து அழுத்தி கொடுமையின் உச்சகட்டம்! கேரளாவில் பரபரப்பு!

0
78

கேரளாவில் இளம்பெண் ஒருவர் யாருக்கும் தெரியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சனை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஸ்மயம் என்ற பெண் 24 வயதுடைய அவர் திங்கட்கிழமை அன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் என்ற பகுதியில் சாஸ்தம்கோட்ட என்ற பகுதியில் 24 வயதுடைய பெண்ணின் இறந்த உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. வரதட்சணை கேட்டு கணவன் கொடுமை படுத்தியதால் இந்த மாதிரியான முடிவை எடுத்துள்ளார் என்று விஸ்மயா வீட்டார் கூறியுள்ளனர்.

திருமணம் ஆனதில் இருந்தே இந்த மாதிரியான பிரச்சனையை சந்தித்து வந்துள்ளார். அதிகப்படியான வரதட்சணை கேட்டு மிரட்டியதாக விஷ்மாயாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

சண்டையின் உச்சத்தில் ஒருமுறை தனது தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார் விஸ்மயா. ஆனால் பின்னர் ஆயுர்வேத படிப்பை முடித்த பின்னர் தனது கணவன் வீட்டிற்கு வாழ சென்றுள்ளார். தாய் வீட்டிலிருந்து திரும்பிய பிறகு விஸ்மயாவின் கணவர் கிரண் தொடர்ந்து அவமதித்ததாக கூறப்படுகிறது.

இறப்பதற்கு ஒரு நாள் முன் விஸ்மயா தனது சொந்தக் கார பெண்ணிடம் பேசி உள்ளார். அதில் படிப்புக்கு கட்டணம் கட்ட 5,000 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் தன்னிடம் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். தனது கணவரிடம் கேட்டால் தர மாட்டார் என்றும் சொல்லியுள்ளார்.

அதன்பின் வாட்ஸ் அப்பில் அந்தப் பெண்ணுடன் அவரது கணவர் மிகவும் கொடூரமான வன்முறைக்கு தன்னை உட்படுத்துவது பற்றி தெரிவித்துள்ளார். இருவரின் வாட்ஸ்அப் மெசேஜ்களை காவல்துறையினர் சோதனை செய்து உள்ளனர்.

வழக்கமாக வீட்டிற்கு வந்த பின் கீரன் விஷ்மயாவை தூக்கி எறிந்து , விஷ்மாயாவின் முகத்தில் உதைப்பாராம், பின் கீழே விழுந்ததும் காலை விஷ்மாயாவின் முகத்தில் அழுத்திக்கொண்டு கொடுமைபடுத்துவார். வரதட்சினையில் வாங்கிக் கொடுத்த வாகனம் நன்றாக இல்லை என, தன்னையும் தன் தந்தையும் மிகவும் கேவலப்படுத்துவதாக விஸ்மயா வாட்ஸ்அப்பில் தனது தோழியுடன் பேசியுள்ளார்.

மேலும் அவரது உடலில் பல காயங்கள் இருந்துள்ளன. அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளின்படி விஷ்மயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பபட்டது.

அவர்கள் பெற்றோர் கொடுத்த புகார் மற்றும் வாட்ஸ் அப்பில் இருந்த மெசேஜ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விஷ்மயாவின் கணவர் கிரணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.

author avatar
Kowsalya