“வேட்டையன் ராஜா” கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது!! மிரள வைக்கும் பார்வையில் ராகவா லாரன்ஸ்!!

0
32
"Hunter Raja" character look released!! Raghava Lawrence looks awesome!!

“வேட்டையன் ராஜா” கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது!! மிரள வைக்கும் பார்வையில் ராகவா லாரன்ஸ்!!

2005   ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக வெளிவந்த ஒரு திரைப்படம் தான் சந்திரமுகி ஆகும். இத்திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார்.

இதில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், பிரபு மற்றும் வடிவேலு என ஏராளமான நடிகர்கள் சேர்ந்து நடித்ததுள்ளனர். இதனைத் தொடர்ந்து பதினேழு ஆண்டுகள் கழித்து தற்போது “சந்திரமுகி – 2 திரைப்படம் திரைக்கு வார இருக்கிறது.

இதனை பி.வாசு இயக்க, ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இதில் நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசை அமைத்துள்ளார். மேலும், லைகா நிறுவனமானது இதை தயாரித்துள்ளது.

தற்போது இந்த படத்திற்கான படபிடிப்புகள் முடிவடைந்து விட்டது என்று படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கூறி இருந்தது. எனவே, இதற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இதனையடுத்து சந்திரமுகி 2 வின் ஹீரோவான வேட்டையன் ராஜாவின் தோற்றம் நாளை காலை வெளியாகும் என்று நேற்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டது.

எனவே, இன்று காலை சரியாக பத்து மணிக்கு “சந்திரமுகி-2” வின் முக்கிய கதாப்பத்திரமான வேட்டையன் ராஜா தோற்றம் வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் படத்திற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்படம் விநாயகர் சதிர்த்தி வெளியிடப்ப்டம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

author avatar
CineDesk