கொரோனா காலத்தில் தம்பதிகள் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்
கொரோனா பாதிப்பானது பொதுமக்களை பல்வேறு விதங்களில் பாதித்துள்ளது.குறிப்பாக நோய்தொற்று வந்தவர்களை பெரும்பாலோனோர் தீண்டத்தகாதவர்கள் போலவே பார்க்கின்றனர்.குடும்ப உறவுகளே வழக்கம் போல பழக பயப்படுகின்றனர்.கொரோனா தொற்றை தவிர்க்க முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது சமூக விலகலே.ஆனால் இதை தம்பதிகளும் கடைபிடிக்க வேண்டுமா?
அத்தியாவசிய பணி காரணமாக வெளியில் சென்று வரும் கணவன் மனைவி உறவு வைத்துக் கொள்ளலாமா? அப்படி உறவு வைத்துக் கொண்டால் கொரோனா தொற்று ஏற்படுமா? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றன.அப்படியே செக்ஸ் வைத்துக் கொண்டால் என்னவெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றது.
வேலை நிமித்தமாக வெளியில் சென்று தங்கி பின்னர் வீடு திரும்பியவர்கள்,லாக்டவுனில் வெளியில் சிக்கி கொண்டு பின்னர் வீடு திரும்பியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட காலம் வீட்டிலேயே அவர்களை தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்.குறிப்பாக இந்த நாட்களில் அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த கொரோனா லாக் டவுன் காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்வது வெகுவாக குறைந்துள்ளது.தவிர்க்க முடியாத சூழலில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் நடக்கும் சுப காரியங்களுக்கு செல்வது அத்தியாவசியமாகிறது.இவ்வாறு எதாவது ஒரு சில காரணங்களுக்காக வெளியூருக்கு செல்லும் தம்பதிகள் ஹோட்டலில் தங்குவதை தவிர்க்க வேண்டும்.அப்படியே தங்கினாலும் ஹோட்டலில் செக்ஸ் வைத்து கொள்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நபர்கள் மற்றும் அடிக்கடி வேலை சம்பந்தமாக பலரையும் சந்திக்கும் நபர்கள் கட்டாயமாக தங்களை வீட்டில் தனிமை படுத்திக்கொண்ட பின்னரே தங்கள் துணையுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக சாதாரண நாட்களில் இருந்ததை போல இந்த நாட்களில் இருக்க கூடாது என்று அறிவுறுத்தபடுகிறது.
இவ்வளவு கட்டுபாடுகளை கடைபிடித்தாலும் அதற்கும் மேலும் சிலருக்கு இதில் சந்தேகம் இருக்கலாம்.அதாவது செக்ஸ் வைக்கும் போது இந்த கொரோனா வைரஸ் பரவுமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.கொரோனா வைரஸானது கை மற்றும் வாய் வழியாக பரவும் என்பதை அனைவரும் அறிவோம்.மேலும் உடலை தொடுவது,நெருக்கமாக சேர்ந்து மூச்சு விடுவது மற்றும் முத்தம் கொடுப்பது உள்ளிட்டவைகளால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
இந்த அச்சம் உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தபடுகிறது.குறிப்பாக கொரோனா பரவலுக்கும் செக்ஸ் வைத்து கொள்வதற்கும் சம்பந்தமில்லை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் தொடுவதால் அதன் மூலமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படியே உடலுறவு வைத்துக் கொண்டாலும் முறையாக கைகளை கழுவ வேண்டும் என்றும் டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.