மது அருந்த பணம் கொடுக்காததாலும் தோசை சுட்டு தரவில்லை என்பதாலும் கணவன் தீயிட்டு தற்கொலை !!

Photo of author

By Parthipan K

மனைவி தோசை சுட்டு தரவில்லை என்பதாலும் ,மது அருந்த பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த கணவன் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அடுத்த குன்றத்தூர், நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ,தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் .இவர் சில காலமாக மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

அவ்வப்போது , அவரது மனைவியிடம் பணம் வாங்கிக்கொண்டு குடித்துவிட்டு தகராறு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.இதனால் அவருடைய மனைவி மது அருந்துவதற்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டுள்ளனர்.

இருப்பினும், ஏதோ ஒரு வகையில் நாள்தோறும் குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வரும் ரவிச்சந்திரன், மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார் .இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் ,தனது மனைவியிடம் சாப்பிடுவதற்காக தோசை சுட்டு தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், மனைவி கோபத்தில் இருந்ததால் உணவு எதுவும் செய்து தர மறுத்து விட்டனர் .இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு அதிகரித்தது. இதனால் கோபம் அடைந்த மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

மனைவியிடம் தோசை சுட்டு தர மறுத்தாலும் ,மது அருந்த பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

தீயில் எரிந்து கொண்டிருந்த ரவிச்சந்திரனின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.