குடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!

0
137

பெண் ஒருவர் தினமும் குடித்துவிட்டு கணவரையும் மற்றும் கணவரின் பெற்றோர்களையும் துன்புறுத்தி சித்திரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு 29 வயதாகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே குடிப் பழக்கம் இருந்திருக்கின்றது. ஆனால் கணவருக்கு திருமணத்திற்கு பின் தான் அந்த உண்மை தெரியவந்துள்ளது.

குடிபோதையில் ஆண்கள் பெண்களை சித்திரவதை செய்வதை பார்த்திருப்போம். ஆனால் இந்த சம்பவத்தில் அப்படியே எதிர்மாறாக உள்ளது. அந்தப் பெண் குடித்து விட்டு தினமும் கணவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். மேலும் கணவரின் பெற்றோர்களையும் சித்திரவதை செய்துள்ளார்.

அதோடு விடாமல் கணவரின் அலுவலகத்திற்குச் சென்று குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார் அந்த பெண். மேலும் தன்னை கணவரும் கணவரின் பெற்றோர்களும் தன்னை கொடுமை செய்வதாக வேறு மகளிர்நல காவல் நிலையத்தில்  அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மனைவியின் சித்திரவதைகளை இனிமேலும் தாங்கமுடியாது என்றும், தனக்கும் பெற்றோருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும், எங்களுக்கு ஏதேனும் நடந்தால் மனைவிதான் அதற்கு காரணம் என்று கண்ணீருடன் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து பின்னர் நடவடிக்கை எடுப்போம் என்று கோக்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்தியா நேபாளிருக்கு இரு ரயில்கள் ஒப்படைப்பு !!
Next articleதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி – அவருக்கு நடந்தது என்ன?