தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!

0
199

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்! 

குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு பலமுறை கூறியும் நிறுத்தாத கணவருக்கு மனைவி கொடுத்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கலெக்டர்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் தப்பு குப்தா வயது-40. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மது போதையில் இருந்த குப்தா மீது மனைவி ஆசிட் ஊற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து குப்தா கலெக்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் குப்தாவின் மனைவியிடம் விசாரணை செய்ததில் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் தகராறு செய்வதாகவும் அதை நிறுத்துமாறு பலமுறை அறிவுரை கூறியும் கேட்காததால் அவர் மீது ஆசிட் ஊற்றியதாகவும் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். ஆசிட் ஊற்றப்பட்ட குப்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கூறுகையில்  கடந்த சனிக்கிழமை இரவு  வீட்டிற்கு மிகவும் தாமதமாக குப்தா வந்துள்ளார். தாமதத்திற்கான காரணத்தை மனைவி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்பொது திடீரென மனைவி கையில் வைத்திருந்த பாட்டிலை திறந்து கணவர் முகத்தில் ஆசிட் ஊற்றியுள்ளார்.

குடி போதைக்கு அடிமையாகி இருப்பதால்தான் இந்த ஆசிட் வீச்சு நிகழ்ந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. குப்தாவுக்கு குடி போதை மட்டும் இல்லாமல் சில போதை வஸ்துகளின் பழக்கங்களும் இருந்ததால் அடிக்கடி அவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே தகராறின் போது ஆஷிட் வீச்சு நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குப்தாவின் மனைவியிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

 

Previous articleதமிழக மக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை!
Next articleபிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!