20 வருட திருமண வாழ்க்கை வாழ்ந்தும் நம்பிக்கை இல்லாத கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அலறி துடித்த தாய்!

Photo of author

By Hasini

20 வருட திருமண வாழ்க்கை வாழ்ந்தும் நம்பிக்கை இல்லாத கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அலறி துடித்த தாய்!

சேலத்தில் 20 வருடமாக குகை பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு கணவன் மனைவி.  கணவருக்கு வயது 50 அவரது பெயர் ஜேசுதாஸ். மனைவியின் வயது நாற்பத்தி ஏழு.  நாமக்கல் மாவட்டம் வையப்பமலை யைச் சேர்ந்த ரேவதி ஆகும்.

இவர்கள் திருமணம் ஆகி 20 வருடங்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது.

இதன் காரணமாக மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன் ஏதோ ஒரு காரணத்திற்காக மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளார். சுற்றியுள்ளவர்கள் அவர்களது சண்டையை விளக்குவதுதான் வழக்கம் என்று கூறுகிறார்கள்.

நாளாக நாளாக மனைவியை அடித்து உதைப்பது அவருக்கு வழக்கமாகவே ஆகிவிட்டது. இதன் காரணமாக அவர் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து கணவர் மீது புகார் தெரிவிக்க இன்று மாலை தனது தாயுடன் வந்துள்ளார்.

அதேபோல் டவுன் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தன்னை அடிப்பதாகவும், மிகவும் கொடுமை செய்வதாகவும் புகார் அளித்து விட்டு அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு தாயாரையும் அழைத்துக் கொண்டு நடந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் பின்னாடியே வந்த ஜேசுதாஸ் தன் பின்னால் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை தன் மனைவியான ரேவதியின் முகத்தில் வீசி விட்டார்.

அப்போது முகத்திலும் நெஞ்சிலும் பட்டு அலறி துடித்து மயங்கி விழுந்துவிட்டார். மேலும்  அவர் அருகில் இருந்த தாயார் மீதும் விழுந்து விட்டது. எனவே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக ஜேசுதாஸ் ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் சம்பங்கி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். ஆசிட் வீசப்பட்டதால் ரேவதியின் தயாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா தப்பி ஓடிய ஜேசுதாசை கைது செய்ய தனிப்படை அமைத்து உள்ளார். இதில் உதவி கமிஷனர் வெங்கடேசன் காவல் ஆய்வாளர் சம்பங்கி, காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் ஜேயேசுதாசை தேடி வருகின்றனர். இன்று மாலை சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.