ஆபாச வீடியோ எடுத்த கணவன்! மனைவி செய்த செயல்!

Photo of author

By Hasini

ஆபாச வீடியோ எடுத்த கணவன்! மனைவி செய்த செயல்!

பெண்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம் என்ற முடிவோடுதான் ஒரு சிலர் இருப்பார்கள் போல. இந்த செய்தியில் பாருங்கள் வேலைக்கு செல்லாத கணவனின் புத்தி போகும் போக்கை. இப்படியுமா இருப்பார்கள், என போலீசரையே யோசிக்க வைய்த்த நபர்.

35 வயதான பெண் ஒருவர், புனேவில் தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது கணவர் சந்தேகத்தின் பேரில் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி தேகு ரோடு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய, போலீசார் அந்த பெண் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது கணவர் மீது புகார் கொடுத்ததை அடுத்து, காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து சென்றுள்ளார். எனவே அந்த தம்பதியை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டோம்.

சந்தேகத்தின் பெயரில் என் கணவர் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், உடல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும் கூறினார். மேலும் அந்தப்பெண் கூறுகையில், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இன்னைக்கு யாருக்கூட பேசுன. யாருக்கூட நடந்து வந்த என்று கேள்வி கேட்பார். அவரது கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்றால் கொடுமைப்படுத்துவார் என்றும் கூறினார்.

இதனையடுத்து பெண் காவலர்கள் அந்த நபரின் மொபைல் போனை வாங்கி சோதனை செய்தனர். கால் ஹிஸ்ட்ரி, மெசேஜ்களை சோதனை செய்தனர். அப்போது அவர் தன் மனைவி குளிப்பதை வீடியோவாக எடுத்து வைத்திருந்தது அறிந்தோம்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், என்னுடைய மனைவி பணிக்கு சென்றுவிட்டால் நான் அவரை மிகவும் மிஸ் செய்வேன். எனவே தான் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என்றார். ஊரடங்கு காரணமாக அந்த நபருக்கு வேலை பறிபோகியுள்ளது.

அதன்பின் அவருக்கு சரியான வேலையும் கிடைக்கவில்லை. இதனால்  தனது மனைவியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்து உள்ளார். இதற்கு முன்பு அவர் இவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை என்றும்,, வேலைக்கு செல்லும்போது தன்னுடைய பணியில் மிகவும் பிஸியாக இருந்துள்ளார். அதன் பிறகு வேலையிழந்த பின்னர் தான் தன்னுடைய மனைவியை டார்ச்சர் செய்யத் தொடங்கியுள்ளார். மனைவியை தவறாக வீடியோ எடுத்ததற்காக அவரை தற்போது கைது செய்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்.