பாஜகவுக்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்! ஈடேறுமா எண்ணம்?

0
69

ஜூன் மாதம் 18 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களையும், ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்து விட்டு திரும்பி இருக்கின்ற சூழ்நிலையில், இந்திய அளவிலான மூன்றாவது அணிகாண கட்சிகள் தற்போது டில்லியில்a காண்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

பிரஷாந்த் கிஷோர் மற்றும் சரத்பவார் உள்ளிட்டோர் ஜூன் மாதம் 11ஆம் தேதி மும்பையில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசியிருக்கின்றன. 10 நாட்கள் இடைவெளியில் டெல்லியில் நேற்றைய தினம் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இது தேசிய அளவில் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.


பிரசாந்த் கிஷோர் சார்பாக இது வழக்கமான சந்திப்புதான் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அல்லாத வலிமையான மாநில கட்சிகளை கொண்ட வலிமையான கூட்டணியை கட்டமைப்பதற்கான கூட்டமாகவே இந்தக் கூட்டம் பார்க்கப்படுகின்றது.

இந்தக் கூட்டமானது நேற்று நடைபெற்று இருப்பதைத் தொடர்ந்து இன்றைய தினம் டெல்லியில் பல எதிர்க்கட்சி தலைவர்களை சரத்பவார் சந்திக்க இருக்கிறார் என்று தெரிகிறது மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முக்கியமான கூட்டம் நாளைய தினம் டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற இருக்கின்றது. இந்த கூட்டத்தில் என்சிபி, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி போன்ற தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். நேற்றைய தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாலிக் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் மேலும் அவர் தெரிவித்ததாவது இந்த கூட்டத்தில் பரூக் அப்துல்லா, பவன் வர்மா, சஞ்சய் சிங், டி ராஜா, சீதாராம் எச்சூரி, ஜாவேத் அக்தர் கேடிஎஸ் துளசி கரன் தாப்பர் போன்ற சமுதாயத்தின் பல பிரிவுகளை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.

எதிர்க்கட்சிகள் உடைய இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான யஸ்வந்த் சின்ஹா தன்னுடைய ராஷ்டிரிய மஞ்ச் என்ற அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்து இருக்கின்றார். இவர் தற்சமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து ஒற்றை அணியாக முதன் முதலாக இப்போதுதான் டெல்லியில் விழுந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. கருணாநிதி காலம்தொட்டு காங்கிரஸ் கட்சியின் நட்புறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று சோனியாவை சந்தித்த சமயத்தில் குறிப்பிட்டிருக்கும் ஸ்டாலினின் நிலைபாடு இதில் என்னவாக இருக்கும் என்பது தற்சமயம் தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.