அப்படி நடிக்க ரெடி…. சர்ச்சை இயக்குனருக்கு சாய் பல்லவி பதில் – ரசிகர்கள் ஷாக்!

Photo of author

By Hasini

அப்படி நடிக்க ரெடி…. சர்ச்சை இயக்குனருக்கு சாய் பல்லவி பதில் – ரசிகர்கள் ஷாக்!

Hasini

Sai-Pallavi 1

சாய் பல்லவி:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகை சாய் பல்லவி. இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சினிமா துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தில் சாய்பல்லவி ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தார் .

sai palavi 4

அப்படித்தான் அவருக்கு தமிழ் பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னதாக தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நடிக்க ஆரம்பித்தார. தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.

தமிழில் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் பெயரும் புகழும் கொடுத்தது,. இந்நிலையில் தற்போது தகவல் என்னவென்றால் சமீபத்தில் பிரபல இயக்குனர் சந்தீப் ரெட்டி சாய் பல்லவி குறித்து பேசிய விஷயம் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டிருக்கிறது.

சந்தீப் ரெட்டி பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பதாவது நான் முதன் முதலில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க வைக்க தான் முயற்சித்தேன். காரணம் பிரேமம் திரைப்படத்தில் அவர் நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் அவரின் கோ ஆர்டினேட்டர் என்னிடம் சாய் பல்லவியா?அந்த பெண் ஸ்லீவ்லெஸ் கூட போடாது .

அதனால இந்த படத்திற்கு நிச்சயமா அவங்க நடிக்க மாட்டாங்க என தெரிவித்தார். அதன் பிறகு தான் நான் ஷாலினி பாண்டேவை நடிக்க வைத்தேன் என சந்தீப் கூறியிருந்தார். அவர் இந்த பேட்டி இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.

சாய் பல்லவி பதில்:

தொடர்ந்து தற்போது அவருக்கு பதில் அளித்திருக்கும் நடிகை சாய் பல்லவி என் மேனேஜரா அப்படி உங்களிடம் சொன்னார்?யாரோ என்னுடைய மேனேஜர் என்று கூறி உங்களை நன்றாக ஏமாற்றி விட்டிருக்கிறார்.

sai-pallavi

இருந்தாலும் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் ஷாலினி பாண்டே விஜய் தேவர் கொண்ட டா இருவருமே அற்புதமாக நடித்திருப்பார்கள் என ஷாலினி பாண்டே அவருக்கு பதில் அளித்திருக்கிறார். இந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் ஓ அப்போ சாய்பல்லவி ஸ்லீவ்லெஸ், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க கூட தயாராக இருக்கிறார் என்பதை இதன் மூலம் மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார் என கூறியிருக்கிறார்கள்.