ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி

0
148

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இயக்குனர் ஏஎல் விஜய் அவர்களால் ’தலைவி’ என்ற பெயரிலும் இயக்குனர் பிரியதர்ஷினின் அவர்களால் ’தி அயர்ன் லேடி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது

இந்த நிலையில் நேற்று முன்தினம் ’தலைவி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் கேலி செய்தனர். ஜெயலலிதாவுக்கும் ரனாவத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்றும், ஜெயலலிதா படத்தை எடுக்க சொன்னால் தீபாவின் படத்தை எடுத்து வைத்துள்ளார் விஜய் என்றும் நெட்டிசன்கள் கேலி செய்தனர்

இந்நிலையில் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்துள்ளோம். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் ஆகியவைகளில் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும்.

ஜெயலலிதா போன்றே நானும் பிடிக்காத விஷயங்களை பட்டென்று சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் உள்ளது. அதனால் ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன். அந்த வேடத்தில் சிறப்பாக நடிக்க எனது அதிகபட்ச ழைப்பை கொடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Previous articleஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்
Next articleவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி