உலக முழுவதும் பரவும் நான் ரெடி தா! தம்பதி ஆனந்த நடனம் ஆடும் வீடியோ தன்சானியாவில் ட்ரெண்டிங்

0
147
I am ready to spread all over the world!! Couple bliss dance is trending in Tanzania!!
I am ready to spread all over the world!! Couple bliss dance is trending in Tanzania!!

உலக முழுவதும் பரவும் நான் ரெடி தா! தம்பதி ஆனந்த நடனம் ஆடும் வீடியோ தன்சானியாவில் ட்ரெண்டிங்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறக்கும் தளபதி விஜய். தற்போது அவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.மேலும் இந்த  படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல்  படலை வெளிவிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 22  ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் பாடல் இணையத்தில் வெளிவந்தது. அந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படலை தளபதி விஜய் பாடியிருந்தார். அதனை தொடர்ந்து அந்த பாடல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அந்த  பாடலில் விஜய் வாயில் சிகரெட் வைத்துக் கொண்டு ஆடியிருந்தார். இதனால் பல சர்ச்சைகள் மக்கள் இடையே எழுந்தது. ஆனாலும் இந்த பாடல் யூடுப் மூலம்  கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அந்த பாடலுக்கு பல ரசிகர்கள்  விஜய் போல நடனமாடி இணையத்தில் பரப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது லியோ பாடலுக்கு விஜய் போல நடனமாடிய தம்பதியின்  வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இவர்கள்  தன்சானியாவில் சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் தற்போது நா ரெடிதா வரவா பாடலுக்கு நடனமாடி இணையத்தில்  பதிவிட்டுள்ளார்கள். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் பலர் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

Previous articleடிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
Next articleஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !!