டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

0
210
Driver suicide!! Shocking information about government employees in the background!!
Driver suicide!! Shocking information about government employees in the background!!

டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் வசித்து வருகிறார்.

அதனையடுத்து அவருக்கு சொந்தமான இடத்தை யாரோ ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அரசு அதிகாரிகள் அது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் மரத்தில் ஏறி தற்கொலைக்கும், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றுள்ளார். அப்போது அவரை பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள் .

இந்த நிலையில் அவர்  மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அதனை அவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் தனது மனுவை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பிரச்சனையில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் , முக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தனக்கு நேர்ந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்த போலீசார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரின் மனைவி தனது கணவனின் சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.