சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தமிழகத்திற்கு வந்தார் கடந்த 2017ஆம் வருடம் செப்டம்பர் மாதம் திமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்நிலையில், நான்தான் பொதுச்செயலாளர் ஆகவே பொதுச்செயலாளர் இல்லாமல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகாது என்று தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பொதுக்குழு கூட்டம் கூடியது சட்டவிரோதமான செயல் என்று மனுவில் தெரிவித்திருந்தார். அது தொடர்பான விசாரணை நடந்தபோது பொதுக்குழு ,மற்றும் செயற்குழு, கூட்டம் ஆவணங்கள் மற்றும் மற்ற கோப்புகளை சசிகலா பார்வையிடலாம் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு நிலுவையில் இருந்து வருகின்றது.
இதற்கிடையே இந்த வழக்கு சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அரசியல் சூழ்நிலை காரணமாக, இந்த வழக்கில் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து இந்த வழக்கு மார்ச் மாதம் 15ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
தமிழக அரசியல் களமும் தற்போது பரபரப்பாக இருக்கும் நிலையில், சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்து இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது இந்த நிலையில் சசிகலா தீவிரமான அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.