தமிழ்நாட்டிற்கும் நான் தான் எம்பி.. அதிர்ச்சியில் திமுக!! சர்ச்சையில் சிக்கும் நடிகர்!!
நடிகர் சுரேஷ் கோபி இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக கேரளா திருச்சூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.இதனால் சினிமா பட வசனங்களை தற்போதும் பேசி வருகிறார்.தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எப்படி முழு எதிர்ப்பு உள்ளதோ, அதே போல தான் கேரளாவிலும் முழு எதிர்ப்பு உள்ளது.அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு எம்பி கூட டெல்லிக்கு கிடைக்கவில்லை.ஆனால் இதனை மாற்றியமைக்கும் விதமாக கேரளாவில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ்கோபி போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டார்.
இதனால் டெல்லி மேலிடம் இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்க உள்ளது.இதன் பரிசாக இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கட்டாயம் கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.இவர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது கேரளா மற்றும் தமிழ்நாட்டின் எம்பி யாக நான்தான் செயல்படுவேன், அனைத்து பிரச்சினைகளையும் கவனிப்பேன் என்று கூறியிருந்தார்.இவர் தற்பொழுது வெற்றியடைந்ததை அடுத்து இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் கூறியதாவது,
நான் பிரச்சாரத்தின் பொழுது கூறிய வார்த்தையில் எந்த மாற்றமும் இல்லை.கேரளம் மற்றும் தமிழ்நாட்டிற்கு ஒரே எம்பி நான்தான்.தமிழ்நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை கவனிக்க கூடிய நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவேன்.இதனையெல்லாம் ஏற்று தான் மக்கள் எனக்கு ஓட்டு போட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார்.தற்பொழுது தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் நான்தான் எம்பி என சுரேஷ்கோபி கூறியது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.